ஹிட்மேன் என்ற ஐடியாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது ஜாஸ்பர் திரைப்படம்
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கதைகளை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வந்துள்ளது. இருப்பினும், ஹிட்மேனை முக்கிய கதாபாத்திரமாக உள்ளடக்கிய சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் இங்கு அதிகமாக வந்தது இல்லை. இதை போக்கும் விதமாக தமிழில் ஒரு ஹிட்மேன் கதை படமாக வரவிருக்கிறது. அந்த படத்தை Visvaroopi Film Corporation சார்பில் மணிகண்டன் சி தயாரிக்க, புதுமுக இயக்குனர் யுவராஜ்.டி இயக்குகிறார். ஜாஸ்பர் என்ற பெயர் வைக்கபட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
நடிகர்கள் ஐஸ்வர்யா தத்தா மற்றும் விவேக், இந்த ஜாஸ்பர் படத்தின் மென்மையான காதல் களத்திற்குள் வருகிறார்கள். அதோடு இந்த படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இப்படத்திற்கு இசையமைக்க, சைந்தவி மற்றும் பிரதீப் குமார் பாடல் காட்சிகளுக்கு இனிமையான குரலை வழங்கி இருக்கிறார்கள்.
விவேக் ராஜகோபாலுடன் ஐஸ்வர்யா தத்தா, சி.எம்.பாலா, ராஜ் காலேஷ், லாவண்யா, பிரசாந்த் முரளி, கோட்டயம் ரமேஷ் மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தனது வாழ்க்கையில் ஒரு பெரிய இழப்பிற்குப் பிறகு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஓய்வில் அமைதியான, தனிமையான வாழ்க்கை வாழும் கதாநாயகனுக்கு ஒரு சிக்கல் வருகிறது. 1990 களில் ஒரு ஹிட்மேனாக வலம் வரும் கதாநாயகன், தனது வாழ்க்கையில் ஒரு இழப்பை எதிர்கொள்கிறார். அந்த இழப்பைத் தடுக்கும் வகையில் இந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் ஜாஸ்பர் தனது ஹிட்மேன் ஆளுமைக்குத் திரும்புகிறார்.
ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஜாஸ்பர் படத்தின் டிரெய்லர் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ஜாஸ்பரை டிசம்பர் 23 2022 அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.