ஹாலிவுட் செல்லும் தேசியதலைவர் திரைப்படக் கதாநாயகன் ஜெ. எம். பஷீர், இயக்குனர் R. அரவிந்தராஜ்

ஹாலிவுட் செல்லும் தேசியதலைவர் திரைப்படக் கதாநாயகன் ஜெ. எம். பஷீர், இயக்குனர் R. அரவிந்தராஜ்

ஜல்லிக்கட்டு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.எம்,பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி தயாரிப்பில், ஊமை விழிகள் உள்ளிட்ட பலவேறு வெற்றிப்படங்களை இயக்கிய ஆர்.அரவிந்தராஜ் இயக்கத்தில், ஜே எம் பஷீர் நடிப்பில் உருவாகும் படம் தான் தேசிய தலைவர்.

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய இப்படம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. ஜே.எம் பஷீர் உடன் பாரதிராஜா, ராதாரவி, முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சினேகன் பாடல்கள் எழுதுகிறார். அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ. எம் சவுத்ரி மூலக்கதை அமைத்திருகிறார். வெங்கட் எடிட்டிங் செய்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைக்கிறார். மிரக்கல் மைக்கேல் ஸ்டண்ட் அமைக்கிறார்.

விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள், அந்த படம் ஹாலிவுட் படம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹாலிவுட்டில் பிரபலமான “பிங்க் ஜாகுவார் எண்ட்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் புதிய ஹாலிவுட் படத்திற்கு ஒப்பந்தமாகிறார் இயக்குனர் R. அரவிந்தராஜ். இந்த ஹாலிவுட் படத்தில் நாயகனாக தேசியதலைவர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இவருடன் கை கோர்க்கிறார் ஜெ எம் பஷீர். இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பை நிறுவனத்தின் தலைவர் ஹிஸ் ஹைன்ஸ் பிரின்ஸ் ஜெகதீஷ் ,மேடம் ஸ்வர்ணா விரைவில் வெளியிட இருக்கிறார்கள். தேசியதலைவர் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இந்த படத்திற்கான பணிகள் மார்ச் மாதம் முதல் தொடங்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *