துப்பாக்கியை மிஞ்சும் தளபதி 67
வாரிசு படத்தோட இசைவெளியீட்டுவிழா டிசம்பர் 24 அன்று பெரிய அளவில் நேரு ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கிறது. அதோடு தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் வாரிசு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்துவதெனவும் அவற்றில் விஜய் கலந்து கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் அந்த திட்டம் இப்பொழுது கைவிடபட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகிறது.
சென்னையில் நடக்கும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு, நடிகர் விஜய் உடனே லண்டன் புறப்பட்டு போக இருப்பதாக கூறப்படுகிறது. குடும்பத்தோடு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துவிட்டு ஜனவரி ஆரம்பத்தில் சென்னை திரும்ப முடிவெடுத்து இருக்கிறார்கள்.
சென்னை திரும்பிய உடன் செவன் ஸ்கிரீன்ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்ள போகிறாஅர். முதல்கட்ட படபிடிப்பு சென்னையில் சுமார் பத்துநாட்கள் நடைபெறும் அதன் பின்னர் ஒரு சிறிய இடைவெளிவிட்டு தளபதி 67 படக்குழு வட இந்தியா செல்லவிருக்கிறார்கள்.
காஷ்மீர்,லடாக் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஐம்பதுநாட்கள் படபிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள். துப்பாக்கி படத்துக்குப் பிறகு அதிகநாட்கள் வட இந்தியாவில் நடைபெறவிருக்கும் விஜய் படத்தின் படபிடிப்பு இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.