மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி திரைவிமர்சனம் ரேட்டிங் 3.6/5

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி  திரைவிமர்சனம் ரேட்டிங் 3.6/5

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி

நடிப்பு : நயன்தாரா, ஊர்வசி, குஷ்பூ, சினேகா, ரெஜினா,  யோகி பாபு, அபிநயா, துனியா விஜய், ராமச்சந்திரா ராஜூ,  சிங்கம் புலி, விச்சு  விஸ்வநாத் மைனா நந்தினி, இனியா நித்தின் சத்யா,

தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்   ஐசரி கணேஷ், குஷ்மிதா கணேஷ்,   அவனி பிக்சர்ஸ் குஷ்பூ சுந்தர், ரவுடி பிக்சர்ஸ் விக்னேஷ் சிவன்

இசை: ஹிப் ஹாப்  தமிழா    ஒளிப்பதிவு : கோபி அமர்நாத்        இயக்கம்: சுந்தர் சி        ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் இன்பன் உதயநிதி        பிஆர்ஓ : சதீஷ் (AIM)

கதை ஓபன் பண்ணா….!

ஊர்வசி இவரது மகள் நயன்தாரா ஒரு போலீஸ்.. இவருக்கு அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது, அதில் மைலாஞ்சி என்ற கிராமத்திற்கு நீ செல்ல வேண்டும் என அந்த அமானுஷ்ய சக்தி சொல்கிறது..அவரை மயிலாஞ்சி ஊருக்கு செல்லும்படி அசரீரி கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவரே வலுக்கட்டாயமாக மயிலாஞ்சி ஊருக்கு பணி மாற்றம் வாங்கிக் கொண்டு செல்கிறார். ஒரு கட்டத்தில் நயன்தாராவும் அந்த மைலாஞ்சி கிராமத்திற்கு சென்ற பிறகு அங்கு 2000 வருடங்களுக்கு பழமையாக இருந்த மறைக்கப்பட்ட ஒரு கோயிலை கண்டுபிடிக்கிறார்.

இந்நிலையில் அவரை அழிக்க சில சாத்தான் சக்திகள் முயல்கின்றன. சாதாரண கான்ஸ்டபிள் நயன்தாரா உண்மையில் மூக்குத்தி அம்மன் வடிவானவர். அவரை பழித்தீர்க்கவே  2000 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் சாத்தான் சக்தியை கொண்ட ரெஜினா மற்றும் அவரது காதலன் தீவீரமாக முயல்கின்றனர். அம்மன் உருவான நயன்தாராவும் சாத்தான் சக்தி பெற்ற ரெஜினாவும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகிறது ..!

. அவ்வூரில் சிறு குழந்தைகளை ரெஜினா கசாண்ட்ரா சாத்தானுக்கு நரபலி கொடுத்து வருகிறார். ஏன் அவர் நரபலி கொடுக்கிறார்? அந்த ஊர்க் கோவிலில் காணாமல் போய்யிருக்கும் மூக்குத்தி அம்மன் சிலை எங்கே?  அந்த மூக்குத்தி அம்மனே தான்தான் என்பதை அறியாமலேயே இருக்கும் நயன்தாரா, எப்போது மூக்குத்தி அம்மனாக வெளிப்படுகிறார் இதனையடுத்து அவர்களின் பழிவாங்கலை நயன்தாரா எப்படி எதிர்கொண்டார்.? அவர்களுக்கும் நயன்தாராவுக்கும் என்ன பகை.? என்பதெல்லாம் விறுவிறுப்பாக சுந்தர்சி.சொல்லியிருப்பதுதான் மீதிக்கதை.

அம்மனாக நயன்தாரா… வில்லியாக ரெஜினா இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.. பக்தி பரவசத்தில் நம்மையும் அம்மனாக ஆட வைக்கிறார் நயன்தாரா..கவர்ச்சியான வில்லியாக கலக்கியிருக்கிறார் ரெஜினா.. இவரது ஆசை காதலனாக நடிகர் துனியா விஜய் மிரட்டி இருக்கிறார்…!

ஊர்வசி,ஓகே ஆனால் யோகி பாபு,சில காட்சிகளில் வந்து போகிற மாதிரி தான் இருக்கிறது மற்றும் கேமியோ ரோலில் அம்மன் வந்து தரிசனம் தருகிறார்கள் குஷ்பூ மற்றும் சினேகா.. குஷ்பு அம்மனாக ஆடி பரவசப்படுத்துகிறார்கள் ..

படத்தின் அமானுஷ்ய காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது. படத்துக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருப்பது ஹிப்ஹாப் ஆதி தமிழாவின் பின்னணி இசைதான். உச்சக்கட்ட அம்மன் காட்சி பாடலுக்கு பார்க்கும் ரசிக பெண்கள் திரையரங்கில் சாமி ஆடி தியேட்டர் அதிர போகுது உறுதி..!

சுந்தர் சி  வெங்கட்ராமன் இணைந்து கதை எழுதி மூக்குத்தி அம்மன் 2 படத்தை வெற்றி படிக்கட்டில் ஏற்றி விட்டதற்கு வாழ்த்துக்கள்..!

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.6/5