சீன் திரைவிமர்சனம் ரேட்டிங் 4.1/5

சீன் (SCENE )
நடிப்பு: சூர்யா, நஸ்ரியா , நஸ்லன், ஆனந்தராஜ், லால் தயாரிப்பு: ஜகாரம் ஸ்டுடியோஸ், 2 D என்டர்டெய்ன்மென்ட் ஜோதிகா- சூர்யா
இசை: சுசின் ஷியாம் ஒளிப்பதிவு: வினித் அகஸ்டியன் இயக்கம்: ஜித்து மாதவன் பிஆர்ஓ : சதீஷ்குமார் (S2)


கதை ஓபன் பண்ணா….!
காவல் துறையில் புலனாய்வில் புலி, கூர்மையான விசாரணை..தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு வழக்கிலும் மிகச் சுலபமான வெற்றியை இலக்காகக் கொண்டவர் ..கொலை நடந்த இடத்தில தன I Q மூலம் துப்பு துலக்கி கொலையாளியை நெருங்கிவிடும் அசாத்திய ஆற்றல் பெற்றவர் போலீஸ் அதிகாரி டி எஸ் பி இன்பராஜ் (சூர்யா)..
நகரையே நடுங்க வைத்த ஒரு சைக்கோ கொலையாளி ஒருவனை தன் திறமையால் கண்டுபிடித்து சிறையில் தள்ளுகிறார்…ஆனாலும் அடுத்தடுத்து நகரில் சைக்கோ கொலைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது… முன்பு இன்பராஜ் கைது செய்த ஒரு தொடர் கொலைகாரனின் பாணியிலேயே புதிய கொலைகள் நடைபெறுவதால், பழைய வழக்கில் ஏதோ மர்மம் இருப்பது தெரியவருகிறது.இதனால் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. காவல்துறையை ஏமாற்றிவிட்டு, பர்ஃப்யூம் கில்லரைப் பிடித்ததாக வேறு ஒருவரைக் குற்றவாளியாக்கிவிட்டார் என்று இன்பராஜ் மீது புகார் தெரிவிக்க வேண்டும் என ஜூனியர் காவல் அதிகாரி ஒருவர் முயற்சிக்கிறார் .

அதே சமயம், தான் வேலையை விட்டு விலகிச் செல்வதாக உயர் அதிகாரி லாலிடம் இன்பராஜ் தெரிவிக்கிறார். அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் லால், இன்பராஜ் குறித்து ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டதும் அவரை ராஜினாமா செய்யச் சொல்கிறார். ஆனால், இன்பராஜ் முன்பு பிடித்த சைக்கோ கில்லரான பர்ஃப்யூம் கில்லரின் கொலைப் பாணியில் ஈஸ்வரன் (நஸ்லன்) என்ற கான்ட்ராக்ட் கில்லர் செயல்படுவதை அறிந்ததும், காவல்துறையில் இல்லை என்றால் என்ன… தனிப்பட்ட முறையில் கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்யும் சூர்யா, தனது உதவியாளராக நஸ்ரியா நசீமை வேலைக்கு அமர்த்திக்கொண்டு வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டுகிறார்….
இந்த விசாரணையில் அவருக்கு நஸ்ரியா, இன்பராஜ் அப்பா இருதயராஜ், அம்மா செல்வி உள்ளிட்ட வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்ட நபர்கள் உதவுகிறார்கள்…தன்னுடைய குறைகளை சமாளித்து எப்படி ஈஸ்வரனை இன்பராஜ் பிடிக்கிறார் என்பதுதான் ‘சீன்’ படத்தின் டிடெக்ட்டிவ் திரில்லர் SCENE


சூர்யா படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை சூழலுக்கு ஏற்ற கதா பாத்திரமாகவே மாறிவிட்டார்..என்ன நடிப்பு ..awesome….! அதுவும் தான் பார்வை அற்றவன் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவர் மனநிலை ஆகட்டும் அதற்காக அவர் மெனெக்கெடல் ..உடல்மொழி ..நஸ்ரியாவுடன் மெல்லிய காதல் .அவர் குற்றவாளியை நெருங்கும் போதெல்லாம் பார்க்கும் நமக்கு படபடப்பு வரவைத்து விடுகிறார்…பல வருடங்களுக்கு பின் கலகலப்பான நஸ்ரியாவின் வரவு அவரின் ரொம்ப இயல்பான நடிப்பு, …கடுமையான உழைப்பை ஒவ்வொரு சீனிலும் கொடுத்து சூர்யாவின் பாதியாக ஆக்ஷன் காட்சிகளிலும் சீன் படத்தில் action சீன் காட்டியுள்ளார் நஸ்ரியா …
இந்த ‘சீன்’ படத்தை குடும்பத்தோடு கண்டு மகிழுங்கள் .படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் .படத்தை இயக்கிய ஜித்து மாதவன் அவருக்கு தனிப்பட்ட பாராட்டு .superb
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 4.1/5



