இட்லிகடை திரைவிமர்சனம் RATING 4.1/5

இட்லி கடை
நடிப்பு: தனுஷ், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரகனி, இளவரசன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே
தயாரிப்பு: ஆகாஷ் பாஸ்கரன் , தனுஷ் , Dawn Pictures & Wunderbar Films Pvt Ltd ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் நிறுவனம்
இசை: ஜிவி பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு: கிரண் கௌஷிக் இயக்கம்: தனுஷ் பிஆர்ஓ: ரியாஸ் கே அகமத், சதீஷ் (AIM)
கதை : OPEN பண்ணா …!
தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் ராஜ்கிரண் ஓலை குடிசையில் இட்லி கடை வைத்து நடத்துகிறார். நவீன கருவிகளை பயன்படுத்தாமல் ஆட்டுரலில் கையால் மாவை அரைத்து இட்லி பதத்திற்கு பக்குவமாக அரைத்தெடுத்து விறகு அடுப்பில் இட்லி அவித்து விற்பனை செய்து வருகிறார். தனுஷ் சிறுவயது முதல் தந்தை ராஜ்கிரணுடன் இட்லிக் கடைக்கு சென்று அவரின் கைப்பக்குவத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார்.அவர் வளர்ந்து கல்லூரி படிப்பு முடிக்கும் போதே இனி இந்த கிராமத்தில் தன கனவுகளை நிறைவேற்ற முடியாது என்று அப்பா அம்மாவிடம் சென்னைக்கு போக அனுமதி கேட்கிறார்..ராஜ்கிரண் தயக்கத்துடன் அனுமதி கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார் ..!
முருகன் (என்கிற) தனுஷ் சென்னை சென்று வேலை …அங்கிருந்து படிப்படியாக முன்னேறி . பின்னர் பாங்காங்கில் பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் வேலை செய்கிறார். அந்நிறுவன அதிபர் (சத்யராஜ்).. இந்த சூழலில் தனுஷின் நன்நடத்தையின் காரணமாக சத்தியராஜின் மகள் ஷாலினி பாண்டே தனுஷை காதலிக்கிறார். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க சத்யராஜ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கும்போது தனுஷின் தந்தை ராஜ்கிரண் மரணமடைந்துவிட்டதாக தகவல் வருகிறது. ஈமக் காரியங்களை முடித்துவிட்டு திருமணத்துக்கு வந்துவிடுமாறு தனுஷையும் அவருக்கு துணையாக இளவரசையும் சத்யராஜ் அனுப்பி வைக்கிறார். சொந்த கிராமத்துக்கு அப்பாவின் மரணத்திற்கு வந்த தனுஷ் அம்மாவின் மரணம் அவரை மேலும் நிலை குலைய செய்கிறது … தனுசுக்கு ஆதரவாக நித்யா மேனன்(கயல்)இருக்க,…!தனக்கு பின்னும் கிராமத்தில் இட்லி கடை தொடர்ந்து நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தனது தந்தையின் கனவை நிறைவேற்ற கிராமத்திலேயே தங்கி விடுகிறார் முருகன்.
ஆனால் பாங்காக்கில் திருமண ஏற்பாடு செய்துவிட்டு தொழில் அதிபரும் அவரது மகளும் தவிக்கின்றனர் மறுபக்கம் என்ன நடந்தாலும் திருமணம் நடக்கவேண்டும், இது நம் குடும்பத்தின் கவுரவ பிரச்சனை என சத்யராஜ் கூற, என்னால் திரும்பி வரமுடியாது என தனுஷ் சொல்கிறார். திருமணமும் நடக்காமல் போகிறது…!
இந்த சூழலில் தனுஷ் .இட்லி கடை நன்றாக நடக்கவில்லை என்று சோர்ந்து போகும் பொழுது கனவில் அப்பா சிவனேசன் வந்து என் அம்மா கொடுத்ததை நான் உனக்கு கொடுத்திருக்கிறேன் முயற்சி செய், என்று சொல்லும் இடம் மிக அருமை ..அந்த கிராம மக்களின் மனதை வென்று அப்பா சிவநேசன் பேரை கெடுக்காமல் அந்த இட்லி கடையை மீண்டும் அதே சுவையுடன் நடத்தி காட்டி வரும் வேளையில் ..!
அருண் விஜய் தங்கையின் திருமணம் நின்றுபோன கோபத்துடன் தனுஷின் ஊருக்கு வருகிறார்,ஆனால் அவர் வந்ததோ முருகனை பழிவாங்க.. அங்கு வரும் அருண் விஜய்,தனுஷை அடித்து உதைக்கிறார்…அந்த சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது.கால் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் கிடைக்கும் அருண் விஜயை பார்க்க பறந்து வந்து . மகனைக் காப்பாற்ற துடிக்கும் தந்தையாக சத்யராஜ் ..!
தனுஷ் மீது பழி வாங்கும் ஆவேசத்தின் உருவமாக அருண் விஜய் ..இட்லிக்கடைக்கு நேர் எதிராக பரோட்டா கடை ஓனர் சமுத்திரகனி நித்யா மேனனை அடையத் துடிக்கும் மாரி சாமியாக அவர் ஒரு பக்கம் ,.., இப்படி நாலா புறமும் எதிரிகள் சூழ, இந்த சிக்கலான நிலையில் தனுஷ் எடுத்த முடிவு என்ன?
அகிம்சையேசிறந்த ஆயுதம்” என்று அப்பாவின் கொள்கையை கையில் எடுக்கும் தனுஷ் … அருண் விஜய் திட்டம் எப்படி நிறைவேறுகிறது என்பதை சென்டிமென்ட் கலந்த ஆக்சன் காட்சிகளோடு அருமையான கிளைமாக்ஸ் ..சத்யராஜ் நியாயத்தின் பக்கம் நின்று பேசுவது ஆறுதல். அருண் விஜய் வில்லத்தனத்தில் awesome மனுஷன் அசத்தி விட்டார் ..இயக்குனர் தனுஷ் அதற்கு நல்ல space கொடுத்துள்ளார் . பார்த்திபனின் போலீஸ் நக்கல் பேச்சு ரசிக்க வைக்கிறது.சத்யராஜின் மகளாக வரும் ஷாலினி பாண்டே தனுஷ் வாழ்க்கையில் அண்ணனும் அப்பாவும் நடத்தும் கொடுமையினை தட்டி கேட்கும் எமோஷனல் காட்சியில் அபாரமாக நடித்துள்ளார்..!
இயக்குனர் தனுஷ் வசன வரிகளை பாராட்டலாம் ..அப்பா அம்மா வை பார்க்காத ஒவ்வொரு பிள்ளைகளும் ஊதாரி தான் ..சொந்த ஊரை விட்டு வெளிநாட்டு மோகத்தில் செல்லும் இளைஞர்களுக்கு எங்க வேணாலும் போங்க அனால் அவங்க ஆணிவேர் சொந்த மண்ணில் என்பதை அப்பா அம்மாவாக வாழ்ந்து மறைவதை கண்கள் குளமாக காட்சி படுத்தி இருக்கார் தனுஷ் ..!அதே போல இளவரசன் தனது தாயிடம் சென்று “நான் ராமராஜன் வந்திருக்கிறேன்” என்று கூறும்போது அவரது தாய் நினைவு மறந்திருக்கும் நிலையில், ” நீ யாரு, எனக்கும் ராமராஜன் என்ற மகன் இருக்கிறான்” என இளவரசனை அடையாளம் தெரியாமல் கூறும்போது நம் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிகள் எட்டி பார்க்கின்றன..!
அப்பாவாக நினைக்கும் கன்றுக்குட்டி 3 மணிக்கு அதிகாலை தனுஷை எழுப்புவதாகட்டும்..கன்றுக்குட்டி கூட நடித்துள்ளது … நம்ம கயல் சொல்லவா வேணும் …கயலை சிவநேசன் மருமகளே பாசத்துடன் அழைத்த காரணத்துக்காக ஓடி ஓடி போய் அவர்களுக்கு உதவுவது.பின் தனுஷிடம் பாசி மாலையை காட்டி தன் சிறு வயது முதல் இருந்த காதலை வெளிப்படுத்தும் இடம் நித்யாமேனன் rocks …!
இந்த “முருகனின்(danush) இட்லிக்கடை“ தேனியில் தொடங்கி தேம்ஸ் நதிக்கரை வரை கிளைகள் பரப்பினாலும் அதன் வேர் சங்கராபுரம் .குடும்ப கதை குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் ..நம் முன்னாள் நினைவுகளை சுண்டி இழுக்கும் படம் ..கண்கள் பனிக்க வசனங்களும் காட்சிகளும் நம் நெஞ்சை விட்டு நீண்ட நாள் அகலாது … இயக்குனர் தனுஷ் ஜெயித்து விட்டார் ..!
அரிசியும் உளுந்தும் (எழுத்தும் இயக்கமும்) சரியானஅளவில்தனுஷ் கை பக்குவத்தில் அரைத்த தரமான இட்லி …..
தொட்டுக்க (நித்யாமேனன்,ஷாலினி பாண்டே) சட்னி சாம்பார் காம்போ ..!
அக்டோபர் 1 முதல் நம்ம முருகனோட இட்லி உலகமெங்கும் ..உண்டு (கண்டு) மகிழுங்க மக்கா ,,,!
நம்ம tamilprimenews ரேட்டிங் 4.1/5