மரியா திரைவிமர்சனம் RATING 3.2/5

மரியா திரைவிமர்சனம் RATING 3.2/5

மரியா
நடிப்பு: சாய் ஸ்ரீ பிரபாகரன், பாவல் நவகீதன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா  தயாரிப்பு: ஹரி கே.ஹரசுதன்

இசை: அரவிந்த் கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்சன்   ஒளிப்பதிவு: மணிசங்கர் ஜி  இயக்கம்: ஹரி கே சுதன்   பிஆர்ஓ: சதீஷ் (AIM)

கதை : OPEN பண்ணா …!

இளம் வயதிலேயே  கன்னியாஸ்திரியான மரியா, தனது தோழியை தேடி அவரது இருப்பிடத்திற்கு வருகிறார். நீண்ட நாள் கழித்து மரியாவை சந்திக்கும் தோழி தான் தங்கி இருக்கும் வீட்டிலேயே ஒரு அறையில் தங்க வைக்கிறார். அங்கு ஆண் நண்பருடன் இருக்கும் தோழி சல்லாபத்தில் ஈடுபட அதையறிந்து மரியா விரக தாபம் கொள்கிறார். அவளும் ஆண் நண்பருடன் பழகி சல்லாபம் செய்ய எண்ணுகிறாள். மரியா என்ற கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தை சுய இன்பம் கொள்ளுதல், ஆண் நண்பருக்காக மனம் அலைபாய்வது போன்ற காட்சிகள் மூலம் அவள் கன்னியாஸ்திரி யில் இருந்து வெளிவந்து சராசரி பெண்ணாக வாழ முடிவு செய்கிறாள் …!

மரியா நான் கன்னியாஸ்திரி ஆக தொடர முடியாது. என்று பெற்ற தாயிடம் சொல்லும் பொழுது. தாயே வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.அதனால் மீண்டும் தன் தோழியின் வீட்டில் வந்து தங்குகிறாள்..தோழியும் அக்கா தனது பாலியல் இச்சைகளை உணர்ந்து, மடத்தை விட்டு விலகி வந்துள்ளதை அறியாமல் தங்க வைக்கிறார் ..ஆனால் அவள் மனம் தேடும் தடுமாற்றத்தை போக்க ,பாவல் நவகீதன் கிறித்தவ மதத்திற்கு எதிரான பிரச்சாரத்தையும் கடவுள் மறுப்பாளராக வந்து எதிர்மறையான வசனங்கள் பேசி தன்னை கிறிஸ்துவர்களுக்கு எதிராக காட்டிக் கொள்ளும் சாத்தானின் குழுவில் தன்னை இணைத்து கொள்கிறாள் மரியா ..!அவளைச் சுற்றியுள்ள தீவிர சித்தாந்தங்கள் எவ்வாறு அவளை அலைக்கழிக்கின்றன என்பதைப் பற்றியும் இப்படம் சொல்கிறது..!

மரியாவின் தோழி மற்றும் உறவுக்கார பெண்ண சித்து குமரேசன் இவர்க்கும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் வரும்போது கொச்சையான ஆனால் யதார்த்தமான வார்த்தைகள் சென்சார் தாண்டி வந்திருப்பது ..அந்த இடத்தில அந்த வார்த்தை எவ்வளவு எமோஷன் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறதுசித்து நடிப்பு awesome..!

மரியாவாக நடித்திருக்கும் சாய் ஸ்ரீ …கன்னியாஸ்திரி  வேடத்திற்கு பொருத்தமாக அமைதியான முகம், தாய் கிட்ட கோப படும் இடத்தில நடிப்பில் தனது முதிர்ச்சியை காட்டுகிறார். கன்னியாஸ்திரி வேடத்திற்கு விடை கொடுத்து சாதாரண உடை அணிந்து தன்னை ரசிப்பதில் தொடங்குது .. உடல் சுகத்துக்கு ஏங்கி அவர் விரகதாபத்தில் துடிப்பது, ஆண் துணை தேடி சல்லாபத்துக்கு பச்சைக்கொடி காட்டுவது என்று தனது செயலுக்கு ஞாயம் கற்பிக்க முயல்கிறார்..

மரியா ஒரு சராசரி பெண் அவளுக்குள்ளும் உணர்ச்சிகள் ,காம இச்சைகள் ,ஏக்கம் அனைத்தும் உண்டு என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறது கதையின் நாயகி மரியா கன்னியாஸ்திரி என்ற எல்லையில் இருந்து சாதாரண ஒரு நார்மல் வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார். அது தவறா அல்லது சரியா? என்பது பற்றி பேசும் படம் …!முடிவு என்ன ஆனது?  என்பதை பார்வையாளர் நம்முடைய கற்பனைக்கே விட்டு இருக்கிறார் இயக்குனர்….!

மரியா திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது ..“மரியா” இந்த கதையை படமாக்க ஒரு தைரியம் வேணும்அது இந்த பட குழுவிற்கு இயக்குனர் ஹரி கே.சுதன், இவர்களிடம் இருக்கிறதுபாராட்டுக்கள்.

நம்ம tamilprimenews ரேட்டிங் 3.2/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *