மெட்ராஸ் மேட்னி திரைவிமர்சனம் Rating 3.5/5

மெட்ராஸ் மேட்னி திரைவிமர்சனம் Rating 3.5/5

படம்: மெட்ராஸ் மேட்னி

நடிப்பு: சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி கிஷோர், கீதா கைலாசம்  தயாரிப்பு: மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ்  இசை: கே.சி.பால சாரங்கன்

ஒளிப்பதிவு: ஆனந்த் ஜி கே.  இயக்கம்: கார்த்திகேயன் மணி  பி ஆர் ஓ: யுவராஜ்

 

கதை .. open பண்ணா ..!

ஜோதிராமயா, என்கிற எழுத்தாளர் சத்யராஜ்  கதாபாத்திரத்தின் மூலம் அருமையாக படத்தை நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குனர்

குப்பை அள்ளும் தொழில் செய்து பின்னர் ஆட்டோ டிரைவர் வேலை பார்க்கும் காளி வெங்கட்  தன் மகன் மற்றும் மூத்த மகளை நன்கு படிக்க வைக்கிறார். ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறார்…அதேசமயம் தன் மகனின் மேற்படிப்புக்கு வங்கியில் கடன் வாங்க முயல்கிறார். இதெல்லாம் ஒரு போராட்டமாகவே அவருக்கு மாறுகிறது. இவர்கள் நடுத்தர வாழ்க்கையில் நடக்கும் சில  சம்பவங்கள் அதன்  முடிவு என்னவாகிறது என்பது நெகிழ்வான  கிளைமாக்ஸ்.

கறுப்பி என்று சொன்னதற்காக அப்பாவிடம் ஆட்டோ விட்டு சரவணன் என்கிற சிறுவனை கொல்ல சொல்லும் அந்த குழந்தை பேச்சு ஆஹா .! ஊறுகாய் விற்கும் சாம்ஸ், கலகலப்பு ..கடைசியில் ரோஷினியிடம் மாட்டி கொண்டு விழிக்கும் போது கலகல .பச்சோந்தி பிரேமாவாக   அரசியல்வாதியாக வரும் கீதா கைலாசம்  செம குறிப்பாக அந்த மின் பொறியாளர் இடம் பஞ்சாயத்து பேசும் காட்சி  அரசியல்வாதியின் அல்லக்கையாக வரும் ராமர் அட்டகாசம் கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் கமல் டிரைவிங் ஸ்கூல்  வைத்து இருக்கும் ஜார்ஜ் மரியம் !குடித்துவிட்டு செய்யும் கலாட்டா ஜாலி ..மின் பொறியாளர்,சுனில் சுஹதா  குளிக்கும் சீன்   செம கலாட்டா அவருக்கு பக்கபலகமாக வரும் ஓகே மதுமிதா,கண்களால் எப்படி தூண்டில் போடுகிறார்.காளி வெங்கட் நண்பன் கெயில்…ரோஷினியின் மேலாளராக வரும் அர்ச்சனா ஒரே காட்சியில் கண்கலங்க வைத்து விடுகிறார… மற்றும்  ரோஷினியைப் பெண் பார்க்க வரும் மாமியாரும் ,சின்ன மாமியாரும், ரோஷினியை கரம்பிடிக்க நினைக்கும் கிஷோர்.  இப்படி எல்லா கதா பாத்திரங்களும் நம்மை உற்சாக உலகத்துக்கு கொண்டு செல்கிறது


பொங்கலுக்கு சட்டை எடுத்துக் தரவில்லை என்று தினேஷ் கோபித்துக் கொண்டு காணாமல் போகும் காட்சிகள் நடுத்தர குடும்பத்தின் சிரமத்தை அப்படியே எடுத்துக் காட்டி இருக்கிறது .காளி வெங்கட் மகனாக வினோத், தினேஷ் என்ற கதாபாத்திரத்தில் இன்றைய இளைஞர்கள் பிரதிபலிப்பு..ரோஷினி ஹரி பிரியன்
என்ற கதாபாத்திரத்தில்ஐ .டி.யில் வேலை செய்யும் பெண்ணாக,அப்பாவை கீழ் ஜாதிக்காரர் என்று சொண்ணதற்காக திருமணத்தையே நிறுத்தும்
அன்பு மகளாக தம்பியிடம் மனம் விட்டு பேசுடா என்று சொல்லும் கட்டத்திலும் நல்ல நடிப்பு

காளி வெங்கட்(கண்ணன்)  என்ற கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுனராக, குப்பை அள்ளுபவராக, மனுஷன் வாழ்ந்திருக்கிறார் அருமையான நடிப்பு மகளை நினைத்து உருகும் காட்சிகளும் மகளுக்கு திருமணம் ஆகவில்லையே என்று ஏங்கும் காட்சியிலும் மிடில் கிளாஸ் அப்பா வாக மனுஷன் வாழ்ந்துள்ளார் ..!ஷெல்லி கமலம் என்ற கதாபாத்திரத்தில் நடுத்தர குடும்பத்தில் தலைவியாக கலக்கி உள்ளார் ..!.அப்பாவிடம் பிள்ளைகள் வளர்ந்த பிறகு விலகி விடுகிறார்கள் என்ற கருத்தையும்,  ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்காக ஒரு தலைவன் எப்படி உழைக்கிறான் அதிலிருந்து மேலே வர முடியாது என்று தெரிந்தும் அடுத்த தலைமுறையாவது முன்னேற மாட்டார்களா ?என்ற தவிப்பையும்,ஒரு பெண் குழந்தை பெற்று விட்டால் அவளைப் படிக்க வைத்து திருமணம் செய்யும் வரை பெற்றோர்கள் தங்கள் பிரச்சனைகளை தலையில் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ,பிள்ளைகள் தன் அப்பாக்களை புரிந்து கொள்ள வேண்டும் என்ற படிப்பினையும் இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனர் கார்த்திகேயன் மணி  இவர் கதை சொல்லி இருக்கும் பாணியில்  இயக்கத்திலும்  நல்ல முயற்சி அவருக்கு அவ டீம் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் மெட்ராஸ் மேட்னி அனைவரும் குடும்பத்தோடு  பார்க்க வேண்டிய படம்

நம்ம tamilprimenews.com Rating 3.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *