பேரன்பும் பெருங்கோபமும் திரைவிமர்சனம் RATING 3.4/5

படம்: பேரன்பும் பெருங்கோபமும்
நடிப்பு: விஜித் பச்சான், ஷாலி வேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், ,தீபா சங்கர், கீதா கைலாசம், சுபத்ரா ராபர்ட், என்.பி.கே. எஸ்.லோகு, சாய் வினோத், சி வலினா
தயாரிப்பு: காமாட்சி ஜெயகிருஷ்ணன இசை: இளையராஜா ஒளிப்பதிவு: தினேஷ்குமார் இயக்கம்: சிவபிரகாஷ் பிஆர்ஓ: ஜான்சன்
45 வயது மதிக்கத்தக்கவராக வரும் நாயகன் விஜித், ஒரு அரசு மருத்துவமனையில் செவியளாராக பணியாற்றி வருகிறார்.அந்த மருத்துவமனை சுகாதார அமைச்சராக இருக்கும் மைம் கோபியின் சொந்த தொகுதியில் அமைந்திருக்கிறது. ஒருநாள் அந்த மருத்துவமனையில் ஒரு குழந்தை காணாமல் போகிறது. விசாரணைக்குவரும் காவலர்கள் செவியளாராக இருக்கும் விஜித்தை சந்தேகித்து கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்கிறார்கள். அவ்விசாரணையில் விஜித் பல சம்பவங்களை காவலர்களிடம் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து விஜித் யாரென்று காவலர்கள் கண்டறிகிறர்கள்.
விஜித் தனது தாய்க்கு ஒரே மகன். 25 ஆண்டுகளுக்கு முன் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். அவ்வூரில் நடக்கும் திருவிழாவில் விஜித்தின் நண்பன் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் அதே ஊரில் ஒரு உயர்சாதிப் பெண்ணை காதலிக்கிறார். இந்த காதல் விவகாரம் பூதகரமாகி விடுவதல் பஞ்சாயத்து கூடுகிறது. பஞ்சாயத்தில், மைம் கோபியும் அவரது சகோதரரான அருள்தாஸும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அக்கிராமத்து மக்களும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காதலனை உயிரோடு எரிக்க, காதலியின் காதுகளில் விஷத்தை ஊற்றி மனநிலை பாதிப்படைய வைத்து ஊரில் சுற்றித்திரிய வைக்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்த கிராமுமே ஆணவப்படுகொலைக்கு ஆதராவாக இருக்கிறது.
அதனால் தன் மகன் விஜித்தை கேரளாவுக்கு படிப்புக்காக அனுப்பி வைத்து விடுகிறார் அவரின் அம்மா. அங்கு விஜித்தை, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஷாலி காதலிக்கிறார். திருமணம் செய்து கொண்டு சென்றால் ஊரில் பிரச்சனை வரும் என்று பயந்தாலும் காதலியை மனைவியாக்கி அழைத்துக் கொண்டு ஊருக்கு வருகிறார். தொடக்கத்தில் அஜித்தின் தாயார் ஷாலியை மருமகளாக ஏற்க தவறுகிறார். பின்னர் அவர் உயர்ஜாதி என்று எண்ணி ஏற்றுக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஷாலியன் சாதி விவரம் தெரியவர அவரை ஊர்காரருடன் சேர்ந்து கொல்ல முயல்கிறார். இதை அறிந்த ஷாலியின் கணவர் விஜித் எடுக்க முடிவு என்ன? அதன் விளைவு 20 ஆண்டுகள் கழித்து என்னவாக உருவெடுக்கிறது என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்
.வில்லனாக மைம் கோபி, லோகு, அருள்தாஸ் இவர்கள் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.இளையராஜாவின் இசையில் பாடல்கள் OK. ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக நின்றிருக்கிறது.சாதி மாறி திருமணம் செய்தால் ஆணவக் கொலை என்பது அவ்வப்போது சமுதாயத்தில் நடக்கிறது. இது போன்ற சம்பவங்களை வைத்து ஏற்கனவே சில படங்கள் வந்திருந்தாலும் ஒரு புதிய பரிமாணத்தை இப்படத்தில் தந்திருப்பது மாறுபட்ட சிந்தனை. பிறப்பால் சாதி கிடையாது வளர்ப்பால் தான் சாதி என்ற ஒரு கருத்தைத்தான் இந்த படத்தில் ஆணி அடித்தார் போல் சொல்லி இருக்கிறார்இயக்குனர் சிவபிரகாஷ்..!
பேரன்பும் பெருங்கோபமும்….. பட குழுவினருக்கு பாராட்டுக்கள்
நம்ம TAMILPRIMENEWS.COM RATING 3.4/5