“டிராகன்” திரை விமர்சனம்.

“டிராகன்” திரை விமர்சனம்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் “டிராகன்’
கதை என்னன்னா…!!!!
பள்ளி படிப்பில் நன்கு படித்து 98% மார்க் வாங்கிய நம்ம ஹீரோ காதலித்த பெண்ணிடம் சென்று தன் காதலை சொல்ல… அவளோ.. நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட..! என்றும்.. புள்ளிங்கோ போல உள்ள பசங்க தான் இப்போ கெத்து என்று சொல்லி உதாசீன படுத்த…! கல்லூரியில் சேரும் ராகவன்.. ட்ராகன் அவதாரம் எடுக்கிறான்…!
கல்லூரியில் கெத்து காட்ட ராகவன் பெயரை ட்ராகன் ஆக்க அதற்கேற்றார் போல கல்லூரியில் கெத்து காட்டுவது 48 அரியர் வைப்பது என ஹீரோ வலம் வர அங்கு ஒரு காதல்.. கல்லூரி படிப்பு முடிந்து எல்லோரும் நல்ல வேலைக்கு செல்ல… நம்ம ஹீரோ வேலை வெட்டி இல்லாமல் சுற்றி திரிவதை கண்டித்து காதலி breakup சொல்ல.. கதை சூடு பிடிக்கும் திருப்பங்கள்… பிரதீப் ரங்கநாதன் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து திருப்பங்களோடு வாழ்க்கையில் ஜெயித்தாரா…?
ஜெயித்து அதை தக்க வைக்க எப்படி போராடினார்..?என்பது அருமையான கிளைமாக்ஸ்…!
ஹீரோ அவர் வாழக்கையின் படி நிலைகளை திரைக்கதை மூலம் மக்களுக்கு கடத்தி ஜெயித்து விட்டார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து…👌
லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் .. இனி டிராகன் பிரதீப் என்று அழைக்க பட அதிக வாய்ப்பு..
Mishkin பிரின்சிபால் awesome ஆக்ட்டிங்..! அப்பாவாக மரியம் ஜார்ஜ்..GVM… KS. ரவிகுமார்..Vj சித்து.. மற்றும் பலர் நடித்துள்ளனர்… காதலிகளாக அனுபமா பரமேஸ்வரன்.. மற்றும் காயடு லோகர் குறிப்பாக அனுபமா கீர்த்தி எனும் பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார்..!
மொத்தத்தில் ட்ராகன் படம் இளைஞர்கள் பாதை தவறினாலும் அதை சரி செய்ய பழகி கொண்டால் வாழக்கையில் வெல்லலாம்..!
அனைவரும் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம் …. பிரதீப் and அஸ்வத் படகுழுவினருக்கு வாழ்த்துக்கள் 💐✍
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.9/5