ஹாட் ஸ்பாட் மூவி திரைவிமர்சனம்
ஹாட் ஸ்பாட் திரைவிமர்சனம்
இயக்குனர் : விக்னேஷ் கார்த்திக்
நடிகர்கள் – கலையரசன், அம்மு அபிராமி, சாண்டி, கெளரி கிஷன் , ஆதித்யா பாஸ்கர்
இசை : சதிஷ் ரகுநாதன்
தயாரிப்பாளர்கள் : பாலமணிமார்பன் , சுரேஷ்குமார்
ஒரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு கதை சொல்வதற்கு தயாராக உள்ளார், தயாரிப்பாளர் கதை கேட்டதும் மூன்று கதைகளை சொல்கிறார் , அதில் ஒன்று பெண்ணுக்கு பதில் ஆண் தாலி கட்டிக்கொண்டு பெண்களின் வேலையை அவன் பார்ப்பதும் , இரண்டாவது கதையில் காதலர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையாகவும் , அதன் பின் மூன்றாவது கதையில் சமூகத்தில் பெண்களின் மீது திணிக்கப்படும் அநீதிகளை கேள்வி கேட்கும் ஒரு கதையாகவும் கூறுகிறார், இறுதியாக ரியாலிட்டி ஷோகளில் நடக்கும் அநீதிகளை மையமாக கொண்டு ஒரு கதையை சொல்கிறார், கதைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஆந்தாலஜி போல இந்தப் படம் உருவாகியுள்ளது,
நடிகர் ஜிவி பிரகாஷ் குமாரை வைத்து இதற்கு முன் அடியே என்ற டைம் டிராவல் படத்தை இயக்கிய விக்னேஷ் தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார், இந்தப் படம் டிரெயிலர் வந்ததில் இருந்து எதிர்ப்புகள் ஆதரவுகள் என பலரும் இந்த படத்தை பற்றி பேசினார்கள் ,
ஆதித்யா பாஸ்கர் மற்றும் கெளரி கிஷன் நடித்துள்ள கதை ஒரு கற்பனை கதை போல சித்தரிக்கப்பட்டுள்ளது, ஆதித்யா தாலி அணிந்து கொள்வது கெளரி குடும்பத்தை பார்த்துக் கொள்வது என ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் இருவரும் நடித்துள்ளார்கள் ,
சாண்டி மற்றும் அம்மு அபிராமி நடித்துள்ள கதை ஒரு சாதாரண காதலர்கள் பேசிக்கொள்ளும் போது ஏற்படும் வாக்குவாதத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே நடக்கும் கருத்து வேறுபாடுகளை சொல்கின்றனர் , இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அழகாக நடித்துள்ளனர் ,
ஆண் பாலியல் தொழில் செய்யும் ஒருவராக சுபாஷ் நடித்துள்ளார். அவரின் காதலியாக ஜனனி நடித்துள்ளார், உண்மை தெரிந்ததும் ஜனனி கோவப்படுவதும், அவர் எழுப்பும் கேள்வியும் சமூகத்தை கேட்பது போல இருக்கிறது , சமூகத்தில் நடக்கும் ஆண் விபச்சாரம் பற்றி இந்தப் படத்தில் தைரியமாக பேசியுள்ளனர்,
இறுதியாக கலையரசன் மற்றும் சோபியா நடித்துள்ள கதையில் ரியாலிட்டி ஷோ எப்படி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கிறது என்பதை கருத்தாக சொல்லியிருக்கிறார், சிறுவர்கள் படிப்பு மற்றும் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இது போன்ற விஷயங்களால் எதிர்காலம் பாதிப்பது தெரியாமல் வாழ்ந்து வருவதை அழகாக எடுத்துரைத்துள்ளார்,
அனைத்து கதைகளும் பெண்களின் மீது நடக்கும் அடக்கு முறைகளை பற்றியும் பெண்களின் மீது சமூகத்தின் மீதான பார்வையும் வெளிக்காட்டியது, இயக்குநர் விக்னேஷ் பெண்களின் பக்கம் நின்று இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார், அதோடு இன்றைய சமூகத்திற்கு தேவையான அறிவுரையும் இந்தப் படத்தில் கொடுத்துள்ளார்,
மொத்தத்தில் ஆந்தாலஜியாக வந்துள்ள இந்த “ஹாட் ஸ்பாட்” பெண்ணியம் பேசும் சமூக படமாக வந்துள்ளது.
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.1/5