இயக்குநர் கதை சொன்ன போதே அழுதே விட்டேன் !’பைக் டாக்சி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜையில் நடிகர் வையாபுரி!

இயக்குநர் கதை சொன்ன போதே அழுதே விட்டேன் !’பைக் டாக்சி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜையில் நடிகர் வையாபுரி!

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் ‘பைக் டாக்சி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ளக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்த விழாவில்,

நடிகர் காளி வெங்கட் பேசியதாவது..
இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை ஆனால் நான் பூஜைக்கு வந்துவிட்டேன். ஆனால் முன்னமே இயக்குநர் எனக்குக் கதை சொன்னார், மிகச் சுவாரஸ்யமான கதை. எனது ரோல் அருமையாக இருந்தது. வையாபுரி அண்ணாவுடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்த குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். படம் சிறப்பான படமாக வரும் நன்றி.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா பேசியதாவது..
இயக்குநர் பெண்மையைப் போற்றும் கதாபாத்திரங்கள் எழுதுபவர் மட்டுமல்ல, நிஜத்திலும் பெண்களை மதிப்பவர். அவர் சொன்ன கதை, மிகவும் பிடித்திருந்தது. நாயகி நக்சாவிற்கு மிகச் சிறப்பான ரோல், இப்படம் மூல அவர் நதியா மாதிரி வருவார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் வையாபுரி பேசியதாவது…

எங்களை வாழவைக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நான் இப்படத்தில் அப்பா கதாபாத்திரம் செய்கிறேன். அப்பா என்றாலே சிறு நடுக்கம் வரும், அப்பா என்றாலே தானாகப் பொறுப்பு வரும், ஆனால் அப்பாவை விட இப்படத்தில் நாயகி நக்ஷாவிற்கு அதிக பொறுப்பு உள்ளது. இயக்குநர் கதை சொன்ன போதே அழுதே விட்டேன். அத்தனை உருக்கமாக இருந்தது. லைசென்ஸ் படத்தில் ஒரு நாள் மட்டுமே நடித்தேன். இயக்குநர் பேசக்கூட மாட்டார் இவர் ஒழுங்காகக் கதை சொல்வாரா ? என்று நினைத்தேன், மிரட்டிவிட்டார். நாயகிக்கு  மிக அழுத்தமான பாத்திரம், புதுமுக நாயகி ஓகேவா எனக்கேட்டேன், உங்களுக்கு மகளாக இவர் தான் சரியாக வருவார். அவரை வைத்து இரண்டு காட்சிகள் எடுத்தேன் எனக் காட்டினார், அதைப் பார்த்தேன்  அற்புதமாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள். ரெஹனா மேடம் இசையில் நடிப்பது மகிழ்ச்சி. லைசென்ஸ் படம் வெற்றிப்படமாக இல்லையென்றாலும், அடுத்த பட வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இளஞ்செழியனுக்கு என் வாழ்த்துக்கள். கண்டிப்பாக இப்படம் வெற்றிப்படமாக அமையும்.

மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த சாமானியன் மற்றும் இயக்குநர் திரு சுசீந்திரன் தயாரித்த மார்கழி திங்கள் போன்ற திரைப்படங்களில் நடித்த நக்ஷா சரண் முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடிக்க, வையாபுரி, காளி வெங்கட் முதலான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர். இவர்களுடன் ஷோபன் பாபு, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் நடிக்கவுள்ளனர்.

ஒரு பெண் பைக் டாக்ஸி ஓட்டுனர் ஒரே நாளில் சந்திக்கும் ஆறு சுவாரஸ்யமான நபர்களைப் பற்றிய கதை இது. இத்திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிறிய நாய்க்குட்டி ஒன்று இடம்பெறுகிறது. மிகுந்த பொருட்செலவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *