ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள் என்பது தான் இப்படம் ! – ரோமியோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி !!

ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள் என்பது தான் இப்படம் ! – ரோமியோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி !!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. ‘ரோமியோ’ திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ‘ரோமியோ’ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நடிகை மிருணாளினி ரவி, “‘ரோமியோ’ படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். பட வாய்ப்பு என்பதை விட இதை பொறுப்பாகவே பார்க்கிறேன். மிருணாளினி என இயக்குநர் என்னைக் கூப்பிட்டதே இல்லை. லீலா என்றுதன கூப்பிடுவார். அந்த அளவுக்கு கதையோடு ஒன்றிவிட்டார். விஜய் ஆண்டனி சார் மல்டி டாஸ்கிங் நபர். பல விஷயங்கள் அவரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் நான் முதல்முறையாக டப்பிங் செய்திருக்கிறேன். பர்சனலாக நான் என்னுடன் இந்தக் கதையை ரிலேட் செய்து கொண்டேன். தலைவாசல் விஜய் சார் எனக்கு ஸ்ட்ரிக்ட்டான அப்பாவாக நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரம்ஜானுக்கு படம் பாருங்கள்”.

இயக்குநர் விநாயக் வைத்தியநாதன், ” ஒரு கணவனாக காதலனாக ஒரு ஆணை பெண் எப்படி பார்க்க வேண்டும் என்பதுதான் கதை. அதற்கான இன்ஸ்பிரேஷன் என் அம்மாதான். அவருக்கு நன்றி. வாய்ப்புகளுக்காக காத்திருந்த போதுதான் விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கால் வந்தது. என்னுடைய படம் பார்த்துவிட்டு அவர் அவ்வளவு டீடெய்லாகப் பேசினார். கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டார். லவ் ஸ்டோரி என முடிவு செய்ததும் எல்லாரும் நோ சொன்னார்கள். அப்போதே இதைத்தான் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இது வழக்கமான காதல் கதை கிடையாது. சக்சஸ்ஃபுல்லான மனிதன் தன் வாழ்வில் மிஸ் செய்யும் காதல்தான் ‘ரோமியோ’. பல சர்ப்ரைஸான விஷயங்கள் கதையில் இருக்கிறது. தன் வாழ்வில் வரும் பெண்ணை எப்படி அணுக வேண்டும் என இதில் சொல்லி இருக்கிறோம். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஹீரோயின் லீலாவுக்காக ஒரு வருஷம் தேடினோம். மிருணாளினி ஃபோட்டோ பார்த்துவிட்டு அவரிடம் பேசினோம். அவருக்கும் கதை பிடித்து விட்டது. விஜய் ஆண்டனி சார் எனக்கு ‘பிச்சைக்காரன்’ படத்தில் இயக்கம் கற்றுக் கொடுத்தார். அவரை தனிப்பட்ட முறையில் அந்த சமயத்தில் தெரிந்து கொண்டேன். அவருடைய நிஜ முகத்தை ஜாலியாக இதில் நீங்கள் பார்க்கலாம். வாழ்க்கையில் உள்ள எல்லா எமோஷன்களும் படத்தில் இருக்கும். அறிவு- லீலாவை உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

Romeo Movie Press Meet Event Stills & News - www.mykollywood.com

நடிகர் விஜய் ஆண்டனி, “இந்த மேடையே சந்தோஷமாக உள்ளது. விநாயக் போன்ற திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. மிருணாளினி தன்மையான நல்ல பொண்ணு. படத்தை புரோமோட் பண்ண எங்களை பத்தி கிசுகிசு கிரியேட் பண்ணலாமா என யோசித்தோம். ஆனால், எதுவுமே வொர்க்கவுட் ஆகவில்லை. முதன் முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன். ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், ஆண் சமூகம் எப்படி இதை பொறுத்துக் கொள்கிறது என்பதுதான் கதை. குடும்பத்தோடு நிச்சயம் படத்தைப் பார்க்கலாம்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *