பர்த்மார்க் திரை விமர்சனம்!

பர்த்மார்க் திரை விமர்சனம்!

 

இயக்குனர்- விக்ரம் ஸ்ரீதரன்
நடிகர்கள் – ஷபீர் கல்லரக்கல் , மிர்ணா
இசை – விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு – ஸ்ரீ ராம் சிவராமன்

கார்கில் போருக்கு பின்னர் அதிலிருந்து திரும்பிய சில வீரர்கள் ‘post war trauma’ எனும் மனநிலை பாதிப்பில் பாதிக்கப்பட்டனர். அதனை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது, அதில் ஒரு ராணுவ வீரராக படத்தின் நாயகன் ஷபீர் கல்லரக்கலை நடித்துள்ளார். டேனியலாக ஷபீரும் அவருடைய மனைவி ஜெனிஃபராக மிர்ணாவும் நடித்துள்ளனர். திருமணமான சில நாளில் கர்ப்பமான மனைவியை இயற்கை முறையில் பிரசவம் பார்க்கவும் மேலும் தனக்கு உள்ள மனச்சிக்கலுக்கு சிகிச்சையை எடுத்துக் கொள்ளவும் தன்வந்திரி குழந்தைபேறு கிராமத்திற்கு தனது மனைவியை அழைத்துச் செல்கிறார் . இந்த சமயத்தில் கற்பமாக இருக்கும் மனைவியின் அந்த குழந்தைக்கு நாம் தான் அப்பாவா? என்கிற சந்தேகம் அவருக்கு ஏற்படுகிறது . இதன் பின் தனது மனைவியின் பிரசவத்தை எப்படி நடத்தினார் இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை நிகழ்ந்தது என்பதே இப்படத்தின் கதை.

சார்பட்டா பரம்பரை படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷபீர் . இதனை தொடர்ந்து ‘நட்சத்திரம் நகர்கிரது’ , ‘கிங்க் ஆஃப் கோதா’ போன்ற படங்களில் துணை நடிகராக நடித்தார், இந்நிலையில், அவர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் இது. இவருக்கு ஜோடியாக கர்ப்பிணிப் பெண்ணாக இந்த படத்தில் ஜெயிலர் புகழ் நடிகை மிர்ணா நடித்திருக்கிறார். ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக இவர் நடித்திருப்பார்.

படத்தின் டிரெய்லர் திரில்லராக இருந்தது. அதுவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது…
ஷபீர் கல்லரக்கல் இந்த படத்தில் நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா? என கேட்கும் அளவுக்கு மிரட்டியிருக்கிறார்… அவரின் நடிப்பு இந்தப் படத்தில் பெரிதும் பேசப்படும் கதாநாயகியும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் எடுத்துக் கொண்ட கதைக்களமே வித்தியாசமானதாக இருந்தது, கதையை மட்டும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளாமல் அதனை மேக்கிங்கிலும் திரைக்கதையிலும் காட்டியிருக்கிறார், ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால் இது வெகுஜன ரசிகர்களை அடைவது சந்தேகம் தான், கண்டிப்பாக அவர்களுக்கு இந்தப் படம் குழப்பத்தை ஏற்படுத்தும்.

Birthmark movie review - Tamil News | Online Tamilnadu News | Tamil Cinema  News | Chennai News | Chennai Power shutdown Today | Chennai Vision

ராணுவ வீரர்களை ஒரு ஹீரோவாக மட்டும் காட்டாமல் அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் அவர்களுக்கும் சொந்த வாழ்வில் மன உளைச்சல் ஏற்படும் என்பதை உணர வைத்திருக்கிறார் இயக்குனர் அதற்கே இயக்குனருக்கு தனி பாராட்டு,
ஒரு போரில் பல கொலைகளை செய்து விட்டு திரும்பும் ஒரு மனிதனின் குற்ற உணர்ச்சிகள் அவனுக்குள் என்னவெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்தும், அதிலும், தேவையற்ற சந்தேகம் கிளம்பும் போது அவன் எப்படி ராட்சசனாக மாறுகிறான் என்பதை உணர வைக்கிறார்… அவருக்கு இணையாக நடிகை மிர்ணா கர்ப்பிணிப் பெண்ணாகவே கடைசி வரை நடித்திருப்பது வேறலெவல்…

Birthmark - Motion Poster | Shabeer Kallarakkal, Mirnaa | Vishal  Chandrashekhar | Vikram Shreedharan - YouTube
குழந்தை பிறப்பை இயற்கை முறை எவ்வளவு எளிதாக்கும் என்பதை இப்படம் ஒரு பாடமாக திரைக்கதையில் கற்று தருவது சிறப்பு.!!

படத்தின் கதை வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும் படத்தில் சுவாரசியம் சற்று குறைவாகவே உள்ளது. மற்றும் நடிகர்களின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் . படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒரு திருப்தியில்லாத உணர்வுதான் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை..!
படத்தில் சுவாரசியத்திற்கு தேவையான சில காட்சிகளை வைத்திருந்தால் படம் இன்னும் பெரிய வெற்றியை அடைந்திருக்கும்

மொத்தத்தில் வித்தியாசமான கதை ரசிக்கும் ரசிகர்கள் பார்க்க கூடியது இந்த “பர்த்மார்க்”..!

நம்ம tamilprimenews.com ரேட்டிங்..2.9/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *