தளபதி விஜய் சார் அவர் தான் இந்தப்படத்தை துவங்கி வைத்தார் ! “ வித்தைக்காரன்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சதிஸ்!.

தளபதி விஜய் சார் அவர் தான் இந்தப்படத்தை துவங்கி வைத்தார் ! “ வித்தைக்காரன்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சதிஸ்!.

 

White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஸ் நாயகானாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

நடிகை சிம்ரன் குப்தா பேசியதாவது..
தயாரிப்பாளர் விஜய் சார், இயக்குநர் வெங்கி ஆகியோருக்கு நன்றி. வித்தைக்காரன் எனக்கு முக்கியமான படம். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறேன். எனக்கு ஆதரவு தந்த சதீஸ்க்கு நன்றி. வித்தைக்கரான் கண்டிப்பாக சிறந்த வெற்றிப்படமாக இருக்கும்; நன்றி.

இயக்குநர் வெங்கி பேசியதாவது..
நிறைய புரடியூசரிடம் அலைந்திருக்கிறேன். ஆனால் விஜய் சாரிடம் கதை சொன்ன உடனே ஓகே சொல்லி விட்டார். அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் நான் கேட்ட அனைத்தையும் தந்தார். படம் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். சதீஸ் பல காலமாக நண்பர், ஹீரோவாகிவிட்டார். இந்தக்கதை சொன்னேன் அவருக்கு பிடித்திருந்தது; ஒத்துக்கொண்டார். நண்பன் யுவா அவனுடன் மாஸ்டர் படத்தில் வேலை செய்தேன். இந்தப்படம் செய்கிறேன் என்றேன் வந்துவிட்டார் இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளான். இந்தப்படத்திற்கு ஐடியா தந்ததிலிருந்து நிறைய பங்கெடுத்த நண்பன் கார்த்திக்கு நன்றி. சிம்ரன் குப்தா என் படத்தின் கதாப்பாத்திரத்திற்கு மிகச்சரியாக இருந்தார். சுத்தமாக தமிழ் தெரியாது ஆனால் டயலாக்கை தயார்செய்துகொண்டு மிக அர்ப்பணிப்போடு செய்தார். நடித்த அனைவரும் நன்றாக செய்துள்ளனர். நானும் இந்தப்படத்தில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப்படத்தில் நிறைய புதுமுகம் தான் வேலை செய்துள்ளனர் அனைவருக்கும் என் நன்றிகள். என் டைரக்சன் டீம், 10பேர் என் கோபத்தை பொறுத்துக்கொண்டு வேலை செய்தனர் அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன். நன்றி.

நடிகர் சதீஸ் பேசியதாவது…
என் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. தமிழக மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டு படம் பார்த்ததற்கு நன்றி. தளபதி விஜய் சார் அவர் தான் இந்தப்படத்தை துவங்கி வைத்தார். அவருக்கு என் முதல் நன்றி. என்னை சமீபத்தில் சந்தித்த போது கான்ஜூரிங் கண்ணப்பன் பார்த்ததாக சொன்னார். அவர் பாராட்டியது மிகப்பெரிய சந்தோஷம். இயக்குநர் வெங்கி விஜயின் தீவிர ரசிகர், ‘V’ செண்டிமெண்ட் எங்களுக்கு ஒர்க் அவுட் ஆகி வருகிறது. படம் ஆரம்பித்து வைத்த விஜய் சார் இயக்குநர் பட டைட்டில் என எல்லாம் ‘V’ தான். இப்படம் வெற்றியாக அமையுமென நம்புகிறேன். ஆனந்தராஜ் சார், இயக்குநர் சுப்பிரமண்ய சிவா எல்லோரும் நல்ல ரோல் செய்திருக்கிறார்கள். சிம்ரன் குப்தா தமிழே தெரியாமல் மக்கப் பண்ணி அத்தனை அர்ப்பணிப்புடன் நடித்தார் அவருக்கு வாழ்த்துக்கள். இந்தப்படம் நல்ல ஒரு முயற்சியாக செய்துள்ளோம். எங்களை நம்பிய தயாரிப்பாளருக்கு நன்றி. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *