சித்தார்த்தின் வெற்றிப்படமான ‘சித்தா’டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது!

சித்தார்த்தின் வெற்றிப்படமான  ‘சித்தா’டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது!

இந்தியாவில் நாளுக்கு நாள் ஓடிடி தளங்களின் பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஒரு சில படங்கள் நேரடியாகவே ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. இவை மட்டுமன்றி பொழுது போக்கிற்கு துளி கூட பஞ்சமின்றி பல்வேறு தொடர்களும் இந்த தளங்களில் உள்ளன. வாரா வாராம், ஒவ்வொரு ஓடிடி தளங்களிலும் ஏதேனும் புது படைப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம்  ஹாட் ஸ்டாரில் சமூக கருத்துகளை கொண்டுள்ள படமான சித்தா வெளியாகிறது,

Chithha - Actor Siddharth new project - Tamil News | Online Tamilnadu News  | Tamil Cinema News | Chennai News | Chennai Power shutdown Today | Chennai  Vision

எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வெளியாகியிருந்த படம் சித்தா. இந்த படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்திருந்தார். சித்தப்பாவிற்கு, அவரது மகளுக்கும் இடையே உள்ள பாசத்தை காட்டும் படமாக ‘சித்தா’ இருந்ததாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். இப்படம், எமோஷனல் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்தது. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக மலையாள நாயகி நிமிஷா சஜயன் நடித்திருந்தார். சித்தா படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 17 முதல் ஸ்ட்ரீமிங்க் செய்யப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *