மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இணையும் ட்ரெயின் படத்தின் பூஜையை வெற்றிமாறன் தொடங்கி வைத்தார்!

மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இணையும் ட்ரெயின் படத்தின் பூஜையை வெற்றிமாறன் தொடங்கி வைத்தார்!

*கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.*

 

சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் *விஜய் சேதுபதி* முதன்முறையாக இயக்குனர் *மிஷ்கினுடன்* கைகோர்த்து உள்ளார். *ட்ரெயின் (Train)* திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் *கலைப்புலி.எஸ்.தாணு* இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார்.

 

இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே *ட்ரெயின் (Train)* என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக *விஜய் சேதுபதி* வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்.*டிம்பிள் ஹயாதி* அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

இப்படத்தில் *ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா* மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

 

தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் *மிஷ்கின்* இப்படத்திற்கும் இசையமைக்கிறார். *பௌசியா பாத்திமா* ஒளிப்பதிவு செய்ய, *ஸ்ரீவத்சன்* படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை *V.மாயபாண்டி* மேற்கொள்கிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *