பெரிய படங்கள் எல்லாம் தோற்றிருக்கிறது! ’சில நொடிகளில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரிச்சர்ட் ரிஷி ஆவேசம் !

பெரிய படங்கள் எல்லாம் தோற்றிருக்கிறது! ’சில நொடிகளில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரிச்சர்ட் ரிஷி ஆவேசம் !

 

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில்,

நடிகை யாஷிகா ஆனந்த், “படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. நிஜத்தில் நான் எப்படி மாடலிங் செய்கிறேனோ அப்படி தான் இந்தப் படத்திலும் மாடலாக நடித்திருக்கிறேன். ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் இருந்துதான் என் பயணம் ஆரம்பித்தது. நான் மிகப்பெரிய த்ரில்லர் ஃபேன். அதனால், இந்தப் படமும் பிடித்து நடித்தேன். நான் தல அஜித் சாரின் மிகப்பெரிய ஃபேன். ரிச்சார்ட் சாரிடம் பேசும்போது அஜித் சாருக்கு நான் கொஞ்சம் நெருக்கம் ஆகியுள்ளேன் என்று நினைத்து சந்தோஷப்படுவேன். பாடல்களும் இசையும் எனக்குப் பிடித்துள்ளது. நீங்கள் திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

‘திரெளபதி’ பட இயக்குநர் மோகன்.ஜி. பேசியதாவது, “என்னுடைய ஹீரோ ரிச்சார்ட் சாருடைய படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இதுபோன்ற விழா அவருக்கு நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என நான் நீண்ட நாள் காத்திருந்தேன். கடினமான ஒரு சமயத்தில் நான் போய் அவரிடம் நின்றபோது எனக்கு உதவுவதற்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படம் ரிலீஸின் போதும் எதிர்பாராத சில பிரச்சினைகள் வந்தது. அப்போதும் நான் அவரிடம்தான் போனேன். எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக நின்றார். அப்படி உருவானதுதான் ‘திரெளபதி’. அவர் இல்லை என்றால் ‘திரெளபதி’ இல்லை. இந்தப் படம் 18 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. அதேபோல, அடுத்த படமான ‘ருத்ரதாண்டவ’மும் 13 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. மூன்றாவது படம் ஒரு கேப் விட்டு பண்ணலாம் என்றார். அதனால்தான் செல்வா சாருடன் ‘பரகாசுரன்’ செய்தேன். நானும் ரிச்சரட் சாரும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறோம். அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும். சினிமாவில் நான் ஐந்து வருடம் பயணித்தது அவரால்தான். திடீரென இவர் யாஷிகாவுடன் ஃபோட்டோ போட்டதும், ‘என்ன சாருக்கு கல்யாணமா?’ என நிறைய பேர் என்னிடமும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவரிடம் நான் கேட்டபோது, சிரித்தார். பின்புதான் படத்திற்கான புரோமோஷன் எனப் புரிந்தது. ரிச்சார்ட் சாரை இது போல திரையில் ஸ்டைலிஷாகப் பார்ப்பது மகிழ்ச்சி. 24ஆம் தேதி படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

Sila Nodigalil (2023) - Movie | Reviews, Cast & Release Date - BookMyShow

இயக்குநர் வினய் பரத்வாஜ்,

“நான் இந்தியாவை விட்டு சென்று 18 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கப்பூரில் செட்டில்ட். நல்ல பேங்க்கிங் வேலை இருந்தது. எனக்குப் பிரியமான ஒருவரை கேன்சரால் இழந்து விட்டேன். அதனால், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த யூடியூப்பில் வீடியோக்கள் போட ஆரம்பித்தேன். சென்னையிலும் இது தொடர்பாக பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். நல்ல வரவேற்பு இருந்தது. சிங்கப்பூரில் ஸ்டார் விஜய், கலர்ஸ் தமிழுக்காக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினேன். அதன் பிறகு குறும்படம் இயக்குவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. எனக்குள் இருந்த இயக்குநரை அப்போதுதான் உணர்ந்தேன். மீடியா குளோபல் ஒன் நிறுவனம் கோவிட் சமயத்தில் எனக்கு கால் செய்து லண்டனில் செய்வது போன்ற ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டார்கள். ரிச்சார்ட் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். சிறந்த மனிதர். அவரை இந்தப் படத்தில் வித்தியாசமான நடிகராகப் பார்ப்பீர்கள். இது என்னுடைய முதல் தமிழ்ப் படம். இந்தப் படம் திரையரங்குகளில் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் அன்பும், ஆதரவும் வேண்டும்”.

நடிகர் ரிச்சார்ட் ரிஷி,

“படத்தில் ஐந்து அற்புதமான பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் நிறைய புது விஷயங்களைச் செய்திருக்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். கண்டிப்பாக தியேட்டரில் இந்தப் படத்தைப் பாருங்கள். சின்னப் படங்கள் எல்லாம் நிறைய ஜெயித்திருக்கிறது. பெரிய படங்கள் எல்லாம் நிறைய தோற்றிருக்கிறது. அதனால், படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *