இயக்குனர் ஷங்கரும் நடிகர் கமலஹாசனும் இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளனர் !
இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்,
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்த நிலையில் ரசிகர்களை இது வெகுவாக கவர்ந்தது. விபத்தால் நிறுத்தப்பட்டது: இப்படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, லைகாவுடனான பிரச்சனை போன்றவற்றால் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டன. விறுவிறுப்பான படப்பிடிப்பு: இதையடுத்து லைகாவுடனான பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டதை அடுத்து, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான நடந்து வருகிறது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவில், பல்லாயிரம் அடி உயரத்திலான விமான சாகசக் காட்சிகள் உள்ளிட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. தென்னாப்பிரிக்காவில் சுமார் 12நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இந்தியன் 2 திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படக்குழு கமல் டப்பிங் செய்யும் வீடியோவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் கமல் மற்றும் ஷங்கர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது