‘பரம்பொருள்’ படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியில் நன்றி தெரிவித்த படக்குழுவினர்!

‘பரம்பொருள்’ படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியில் நன்றி தெரிவித்த படக்குழுவினர்!

கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான ‘பரம்பொருள்’ திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார். சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர்.

இன்று (30/08/23) இப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி நடைபெற்றது , காட்சி முடிந்ததும் படக்குழுவினர் பத்திரிக்கையளர்களை சந்தித்து பேசினர். இதில்

தயாரிப்பாளர் கிரிஷ் பேசியதாவது,

பரம்பொருள் படத்தின் முதல் காட்சி பத்திரிக்கையாளர் களுக்காக இன்று திரையிடப்பட்டது, அனைவரிடமும் நல்ல வரவேற்பு மற்றும் ஆதரவு கிடைத்துள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மக்களிடம் நீங்கள்தான் இந்தப் படத்தை கொண்டு செல்ல வேண்டும் நன்றி

இயக்குனர் அரவிந்த் ராஜ் பேசியதாவது,

அனைவரும் பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்துள்ளீர்கள் அதற்கு நன்றி, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது , நீங்கள் இப்போது அழித்த ஆதரவு போல படம் வெளியான பின்பும் உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன் , மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அனைவருக்கும் நன்றி,

Paramporul Review Ratings | Paramporul Tamil Movie Review | Paramporul  First Review - Filmibeat

கதா நாயகன் அமிதாஷ் பேசியதாவது,

பரம்பொருள் படம் எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான படம் ஒரு படபடப்போடு தான் நான் இங்கு வந்தேன் , ஆனால் நீங்கள் கொடுத்துள்ள விமர்சனம் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது , இது போன்ற படங்களை பத்திரிக்கையாளர் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் , இந்தப் படத்திற்கும் உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன் , இந்தப் படத்திற்காக அரவிந்த் இரண்டு ஆண்டுகளாக கடினமாக உழைத்துள்ளார், அவருக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சி , நன்றி

இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதம் 1 அன்று திரையில் வெளியாகவுள்ளது,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *