பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜவான் திரைப்படத்தின் வெளியீட்டு முன்னோட்ட நிகழ்ச்சி! விழாவில் நடனமாடிய ஷாருக்கான்!

பிரம்மாண்டமாக  நடைபெற்ற ஜவான் திரைப்படத்தின் வெளியீட்டு முன்னோட்ட நிகழ்ச்சி! விழாவில் நடனமாடிய ஷாருக்கான்!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ஜவான். இந்த “ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். இந்தப் படத்தை கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (30/08/23) சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது, இவ்விழாவில் நடிகர் ஷாருக்கான் , நடிகர் விஜய் சேதுபதி , இயக்குனர் அட்லீ மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்

இயக்குனர் அட்லீ பேசியதாவது,

அனிருத்துடன் பணி புரிந்தது பள்ளி நண்பனுடன் சேர்ந்து வேலை பார்க்கும் அனுபவத்தை அளித்தது, இந்தப் படத்தில் அவரது பங்கு அபாரமானது, யோகி பாபு அண்ணன் இளம் இயக்குனர்களை வளர்க்கும் ஒரு நடிகர் அவரது உழைப்பு அவரை உச்சத்தில் சென்று அமர வைக்கும், விஜய்சேதுபதி அண்ணன் ஒரு மிகச்சிறந்த நடிகர் , அவரை தவிர யாரும் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க மாட்டார்கள், தனக்கான வசூலை பார்க்காமல் கதையில் தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு முக்கியம் கொடுப்பவர், அவர் ஒரு நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவருக்கும் எனது நன்றி, ஷாருக்கான் சார் என்னை பார்த்த முதல் நாளில் என்னை எப்படி பாத்தாரோ இன்று வரை அதே போலத்தான் என்னுடன் பழகி வருகிறார் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது , அவருடன் இணைந்து படம் இயக்குவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்தப் படம் கண்டிப்பாக பெரும் சாதனை படைக்கும் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி,

Image

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது,

இந்தப் படம் தொடங்க முக்கிய காரணம் அட்லீதான், இங்கிருந்து ஒரு குழுவையே பாலிவுட்டுக்கு அழைத்து சென்றுள்ளார், அட்லீ எனக்கு அதிக சுதந்திரம் கொடுத்து என்னிடம் வேலை வாங்கினார், ஷாரூக்கான் சாருடன் இணைந்து நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை, அவருடன் பணி புரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அவர் சக மனிதர்களை சமமாக நடத்துவார், அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அனிருத் மொத்த இடத்தையும் தீ பிடிக்க வைத்து விட்டார், படமும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன், எனக்கு வாய்ப்பளித்த அட்லீக்கு நன்றி.

Image

இசையமைப்பாளர் அனிருத் பேசியது,

தயாரிப்பாளர் கௌரி மேம் மற்றும் ரெட் சில்லிஷ் நிறுவனத்திற்கும் நன்றி, என் இசைக் குழு அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், அட்லீ செய்த்தது சாதாரண விஷயமில்லை, சொந்த கதையில் ஷாருக் கான் சாரை வைத்து இயக்குவது எளிதல்ல , ஆனால் அதை அவர் செய்து முடித்தார், என்னை பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தினார், அதற்கு மிகவும் நன்றி, இந்தப் படத்திற்காக அதிக மெனக்கெடல் செய்துள்ளார், கண்டிப்பாக இந்தப் படம் அவருக்கு ஒரு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நம்புகிறேன், நன்றி.

இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், SRK உடன் இணைந்து ஜவானின் திரைக்கதையை அட்லீ மற்றும் எஸ் ரமணகிரிவாசன் மற்றும் வசனங்களை சுமித் அரோரா ஆகியோர் எழுதியுள்ளனர். ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கப்படும் ஜவான் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *