சிபிராஜின் ‘மாயோன்’ பிரைம் வீடியோ டைரக்ட்டில் வெளியாகியுள்ளது !

சிபிராஜின் ‘மாயோன்’ பிரைம் வீடியோ டைரக்ட்டில் வெளியாகியுள்ளது !

 

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் தமிழ் திரைப்படமான ‘மாயோன்’ தற்போது பிரைம் வீடியோவின் பிரைம் வீடியோ டைரக்ட்டில் வெளியாகி இருக்கிறது. சிபி சத்யராஜ் நடித்த டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸின் ‘மாயோன்’ கடந்தாண்டு உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. இது திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இதன் தனித்துவமான உள்ளடக்கத்தை பாராட்டினர். புராண இதிகாச திரில்லர் படைப்பு என பாராட்டப்பட்ட இப்படம், அனைத்து எல்லைகளையும் கடந்து பார்வையாளர்களின் இதயத்தை வென்றது. புதுமையான விளம்பர உத்திகளின் மூலம் தொடக்கத்திலிருந்தே திரையரங்கத்தில் பார்வையாளர்கள் குவிந்தனர். இப்படத்தைக் கண்டு அவர்கள் முழு மனதுடன் கொண்டாடினர்.

‘மாயோன்’ ஒரு இணையற்ற தமிழ் திரைப்படமாக தனித்துவம் பெற்று திகழ்கிறது. ஏனெனில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு ஆண்டை கடந்த பிறகும் ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் குறையாமல் வைத்திருக்கிறது. கனடாவில் நடைபெற்ற 47வது டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புராண திரைப்பட விருதை வென்று, சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

திரையரங்க அனுபவத்தை தவறவிட்டவர்களுக்கு டிஜிட்டல் தள வெளியீடு எப்போது வரும்? என்று எதிர்பார்ப்பு முடிவிற்கு வந்திருக்கிறது. ஏனெனில் இந்த திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவின் பிரைம் வீடியோ டைரக்ட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. அட்டகாசமான கதைக்களம்.. கவனம் ஈர்க்கும் திரைக்கதை.. நட்சத்திர நடிகர்களின் அற்புதமான நடிப்பு.. இசைஞானி இளையராஜாவின் ஒப்பற்ற இசை.. என பல விசயங்கள் ‘மாயோன்’ படம்- பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

‘மாயோன்’ திரைப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸின் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். என். கிஷோர் கதை எழுதி இயக்கியிருக்கிறார். சிபிராஜ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரங்களின் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கே. எஸ். ரவிக்குமார், ராதாரவி, பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சி. ராமபிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ் இணைந்து படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கின்றனர்.

திறமையான கலைஞர்கள் பாடிய மூன்று பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. ‘மாயோனே மணிவண்ணா..’ எனத் தொடங்கும் பக்தி பாடலை பிரபல கர்நாடக இசை பாடகிகள் ரஞ்சனி -காயத்ரி பாடியிருந்தனர். பின்னணி பாடகர் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாசுடன் இணைந்து வசீகரிக்கும் கிருஷ்ணரை பற்றிய பாடலையும் பாடியுள்ளனர். இந்த தெய்வீக பாடல்களை அவர்கள் பாடியிருப்பது சிறப்பான திறமையை வெளிப்படுத்துவதுடன் அழகான இசை அனுபவத்தையும் தருகிறது. மேலும் பின்னணி பாடகர்கள் ஸ்ரீ நிஷா ஜெயசீலன் மற்றும் டி கே கார்த்திகேயன் இணைந்து, ‘தேடித் தேடி..’ எனத் தொடங்கும் காதல் தாலாட்டு பாடலுக்கு குரல் கொடுத்து இந்த பாடலுக்கு அழகு சேர்த்திருக்கிறார்.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பை விரைவில் டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் எதிர்பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *