புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன் விருது’ சின்னத்தை வெளியிட்ட சேரன் !

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன் விருது’ சின்னத்தை வெளியிட்ட சேரன் !

புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில், சமூகம், தொழில், அறிவியல் தொழில்நுட்பம், தமிழ் இலக்கியம், விளையாட்டு மற்றும் கலை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்து வரும் தமிழர்களை தேர்வு செய்து தமிழன் விருது என்ற விருதை வழங்கி சிறப்பித்து வருகிறது,

 

அந்தந்த துறைகளில் சாதிக்க துடிக்கும் இளையோருக்கும், ‘நம்பிக்கை நட்சத்திரம்’ விருது அளிக்கப்படுகிறது..

பத்தாம் ஆண்டு விருது வழங்கும் விழா, வரும் 11ல், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது, அங்கு ” தமிழன் விருது” சின்னத்தை, இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் வெளியிட்டடார்

 

இந்த நிகழ்வில் புதிய தலைமுறை செய்தி ஆசிரியர் திருப்பதி, நிர்வாக ஆசிரியர் சீனிவாசன், தலைமை செயல் அதிகாரி ராஜாமணி, நிகழ்ச்சி பிரிவு தலைவர் கார்மல் மற்றும் நிகழ்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *