அமலா பால் தேர்வு செய்த கதாபாத்திரத்தில் ஷங்கரின் மகள் அதிதி! “ராட்ஷசன் 2” படத்தில் திடீர் மாற்றம்!

அமலா பால் தேர்வு செய்த கதாபாத்திரத்தில் ஷங்கரின் மகள் அதிதி! “ராட்ஷசன் 2” படத்தில் திடீர் மாற்றம்!

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி வலம் வருகிறார். கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் நடித்த அதிதி ஷங்கருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைச்சுது. அதேவேகத்தில் மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடிச்சார் அதிதி ஷங்கர். இந்தப் படம் இரு வாரங்களுக்கு முன்னர் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மாவீரன் படத்தில் அதிதி கமிட்டான போதே இளம் நடிகைகள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியது. இயக்குநர் ஷங்கரின் மகள் என்பதால், அதிதி எளிதாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகிவிடுவதாக சொல்லப்பட்டுச்சு.

தற்போது அமலா பால் நடிக்க வேண்டிய படத்திலும் அதிதி கமிட்டாகவுள்ளது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு விஷால் – இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் முதன்முறையாக உருவான ‘முண்டாசுப்பட்டி’ திரைப்படம் காமெடி ஜானரில் உருவாகியிருந்தது. இதனையடுத்து இக்கூட்டணியில் வெளியான ‘ராட்சசன்’ ஹாரர் ப்ளஸ் சைக்கோ த்ரில்லரில் ரசிகர்களை மிரட்டிச்சு..சைக்கோ த்ரில்லர் படம் என்றால், அது ராட்சசன் தான் என ரசிகர்களே கூறும் அளவிற்கு மாஸ் காட்டியது. இப்படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார்.

High Buzz - Is it time for Ratsasan 2? | StudioFlicks

இந்நிலையில், விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணியில் ‘ராட்சசன்’ 2ம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இப்படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் எனவும் சொல்லப்பட்டது. அதன்படி ராட்சசன் 2ம் பாகத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமலா பால் கேரக்டரில் அவருக்குப் பதிலாக அதிதி நடிப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் ராட்சசன் 2ம் பாகத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளாராம் அதிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *