ஜெயிலர் படத்திற்கு சென்சார் குழு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது ! இத்தனை விதிகளா!

ஜெயிலர் படத்திற்கு சென்சார் குழு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது ! இத்தனை விதிகளா!

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், மேலும் நடிகை தமன்னா மற்றும் மோகன்லால் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது,

இந்தப் படத்திற்கு சென்சார் குழு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது.எனினும் படத்தில் ரவுடிகள் கொலை செய்யும் போது ஏற்படும் ரத்த காட்சிகளின் நீளம் குறைக்கப்பட்டுள்ளன.

Jailer - Official Teaser | Tamil Movie News - Times of India

கார் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொறுப்பு துறப்பு போடவும், கொலை செய்யும் காட்சிகளின் நீளத்தை குறைக்கவும், நான் எஞ்சாய் பண்ணிக்கறேன் என்ற வசனத்தை மியூட் செய்யவும், புகைப்பிடித்தல் காட்சிகளை நெருக்கமாக காட்டுதவதை தவிர்க்கவும் படக்குழுவுக்கு தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *