தோனி entertainment வழங்கும் L G M திரை விமர்சனம்.
தோனி entertainment சார்பாக சாக்ஷி தோனி தயாரிப்பில் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நதியா இவானா யோகிபாபு மற்றும் பலர் நடித்து வெளி வந்துள்ள படம் தான் LGM…அதாங்க let’s get married.. சரி கதைக்கு வருவோம்.
Open பண்ணா.
ஹரிஷ் இவானா ஹோட்டல் ஒன்றில் சந்திக்கிறார்கள்.. அவளிடம் வழக்கம் போல ஹீரோ காதலை சொல்ல தயங்கும் ஹரிஷ் நண்பர்கள் உதவியை நாட ….அங்க ஒரு ஃப்ளாஷ்பேக் இரண்டு வருடம் முன்பு…ஒருவழியாக காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைக்கிறது. ஆனால் ஒரு கண்டிஷனோடு ஆம் இருவரும் இரண்டு வருடம் பழகி பார்க்கலாம்..புடிச்சா கல்யாணம் பண்ணலாம்..என்று அவர்கள் தீர்மானம் எடுத்து இன்றோடு இரண்டு வருடம் முடிய ..இங்குதான் நம்ம ஹீரோ காதலை சொல்ல தயங்கும் தருணங்கள்
..ஆஹா.அப்புறம்..love accepted…இப்போ ஹரிஷ் அம்மாவிடம் இவானவை காதலிப்பதை சொல்லி பெண் பார்க்க வருகிறார்கள்..
மீண்டும் அவளுக்கு ஒரு தயக்கம் அதனால் மாமியார் இல்லாமல் தனி குடித்தனம் என்று அடம் பிடிக்க…ஹரிஷ் முடியாது என்றதும் சின்ன break…ஒரே அலுவலகம் இருவரும் அடிக்கடி பார்க்கும் சூழ்நிலை மனசை மாற்ற இவானா ஹரிஷ் கிட்ட ஒரு ட்ரிப் போலாமா என்று கேட்க..கதை திசை மாறுது… இவானா மாமியார் நதியா வுடன் பழகி பார்க்க இந்த ட்ரிப் பயனளிக்கும் என்று கூற…சில பல காமெடிக்கு பின்னால் பயணம் ஆரம்பம்..
பயணத்தில் என்னவெல்லாம் நடந்தது…நதியா இவானா ஒன்று சேர்ந்தார்களா…!!!
மாமியார் மருமகள் நடுவே ஹரீஷ் நிலமை என்ன ஆனது…
இறுதியில் நாம் எதிர் பார்த்த Let’s Get Married.. சுபம்.
Ist half கொஞ்சம் காமெடி கலந்து கொண்டு சென்றது அருமை.ஹரீஷ் நண்பர்கள் அக்கா மாமா இவனா தாத்தா பாட்டி என்று கூட நடித்தவர்கள் படத்திற்கு பெரும் பங்கு வகித்துள்ளனர்… செகண்ட் half படம் கொஞ்சம் நீளம் அதிகம்..பயணம் திசை மாறி செல்கிறது…அந்த நீளங்களை எடிட்டர் கவனித்து இருக்கலாம்..மற்றபடி ஃபேமிலியொட வந்து சிரித்து ரசிக்க நல்ல படம் LGM
நம்ம tamilprimenews.com rating..3.2/5