எக்கோ திரைவிமர்சனம்!
எக்கோ படத்தில் ஶ்ரீகாந்த் பூஜா ஜாவெரி வித்யா பிரதீப் ஆஷிஷ் வித்தியர்த்தி டெல்லி கணேஷ் பிரவீணா மற்றும் பலர் நடிக்க இசை நரேன் ஒளிப்பதிவு கோபிநாத் தயாரிப்பு ராஜசேகர் இயக்கம் நவின் கணேஷ்.
open பண்ணா..
ஶ்ரீகாந்த் சாப்ட்வேர் நிறுவன அதிகாரி அவர் மனைவியுடன் வாழ்ந்து வரும் வீட்டில் இவருக்கு திடீர் என காதுக்குள் எதோ எக்கோ கேட்பது போல உணருகிரார்.. அடுத்தடுத்த நாட்கள் அது ஒரு அமானுஷ்ய சக்தி அவரை பல விதங்களில் மிரட்டுவது தெரிய வர… ஶ்ரீகாந்த் மனைவி இவர் நடவடிக்கை புரியாமல் பயந்து போய் வீட்டை விட்டு அவங்க தாய் வீட்டுக்கு சென்று விடுகிறார்…ஶ்ரீகாந்த் டிவி நிகழ்ச்சியில் அமானுஷ்ய சக்திகளை விரட்டும் ஆஷிஷ் வித்யார்த்தி யை பற்றி கேள்வி படுகிறார். அவரை சந்தித்து தன் பிரச்சனையை பற்றி சொல்ல ஆரம்பிக்க…கதையும் தொடங்குகிறது..
ஶ்ரீகாந்த் சாப்ட்வேர் கம்பனியில் வேலைக்கு சேர அங்கு அவரை company MD யின் மகள் இவரை விரும்புகிறார்…இவர்கள் காதலை ஶ்ரீகாந்த் தன் அம்மாவிடம் தெரிவிக்க நண்பர்கள் உதவியை நாட..ஆனால் நிலைமை தலைகீழாகப் போகுது…ஶ்ரீகாந்த் அம்மா அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல ஒரு சில காரணங்களால் மாமன் மகளை மணக்கும் சூழல் அமைகிறது..இது அறிந்த பூஜா இவரை விட்டு விலகி செல்ல இவர் கொஞ்சம் கொஞ்சமாக மனைவியுடன் பாசமாக பழகுகிறார்..இந்த சூழலில் மனைவிக்கு பேய் பயம் அதிகம்..அதனால் இரவில் அவர் காதுக்குள் கேட்கும் சத்தங்களை உணர்ந்து பயந்து அலருகிரார்..ஒருகட்டத்தில் அந்த அமானுஷ்ய குரல் இவரை தற்கொலைக்கு தூண்ட மரணமடைகிரார்… இங்க கதை சொல்லி முடிக்க ஆஷிஷ் வித்யார்த்தி என்ன செய்து அவரை காப்பாற்றினாரா? அந்த வீட்டில் நடந்த சம்பவங்கள் என்ன என்பதை திகிலூட்டும் வகையில் மிரட்டி உள்ளார்..இயக்குனர்
எதிர்பாரா திருப்பங்களுடன் கதையை கொண்டு போன விதத்தில் இயக்குனரை பாராட்டலாம்..இஅவருக்கு பக்கபலம் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு அருமை.ஶ்ரீகாந்த் மற்றும் நடித்த அனைவரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்..
எக்கோ பேய் படங்களில் புது வித மிரட்டல்.
tamilprimenews.com rating..3/5