கொலை திரை விமர்சனம்!
பூட்டிய வீட்டில் மாடல் அழகி லைலா கொலை செய்யபட்டு கிடக்கிறாள்.. விசாரணை செய்யும் காவல் அதிகாரி ரித்திகா சிங் முன்னாள் காவல் அதிகாரி டிடெக்டிவ் விஜய் ஆன்டனி உதவியை நாட அவரும் நடந்த கொலை பற்றி துப்பறிகிரார்கள்..
கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து கொலையாளி யார் என்பதை கண்டு பிடிக்கும் வரை அடுத்தடுத்து நகரும் சம்பவங்கள்… இதனிடையே வரும் கதாபாத்திரங்கள் தங்கள் பங்களிப்பை அற்புதமாக கொடுத்துள்ளார்கள்..ராதிகா மற்றும் மாடல் அழகி மீனாட்சி சௌத்ரி..ஜான்விஜய்..அர்ஜுன் சிதம்பரம் சித்தார்த் சங்கர் இவர்கள் மூலம் இயக்குனர் கொலை (திரைக்)கதையை அழகாக நகர்த்தி உள்ளார்..💐
கொல்ல பட்ட மாடல் அழகி சம்பந்த்பட்டவர்களை விஜய் ஆன்டனி விசாரிக்கும் அணுகுமுறை கனிவான மிரட்டல்…தொட்டு நெருங்கி விட்டோம் என்ற நிலையில் அங்கே நடக்கும் திருப்பங்கள் ..ஒரு கிரைம் திரில்லர் படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் உலக தரத்தில் எடுத்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள்…யார் இவர் என்று தேடினால் விடியும் முன் என்ற படத்தை இயக்கியவர் இவர்தான்…
வாழ்த்துக்கள் ..அப்புறம் அவருக்கு பக்க பலம் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு..awesome.. இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் BGM என்ன தேவையோ அதை கொடுத்துள்ளார்..
தயாரிப்பாளர்கள் மற்றும் கொலை பட குழுவிற்கு வாழ்த்துக்கள்💐
கொலை போன்ற crime investigation படத்தின் கதை , திரை அரங்குகளில் கண்டால் மட்டுமே அந்த அனுபவத்தை உணர முடியும்..கதை போகும் பாதையை விமர்சனம் கொண்டு வெளிப்படுத்தாமல் இருப்பது அவசியம் என நினைப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
ஒரு கொலை அதை கண்டு பிடிக்கும் கதை என்று வருபவர்களுக்கு crime thriller படத்தில் அழகான விஷூவல் ட்ரீட் கொடுத்துள்ளனர் பட குழுவினர்…
கொலை திரைப்படம் உலகம் முழுவதும் இன்று 1020 திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது..
ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் கிரைம் திரில்லர் படம் “கொலை”
tamilprimenews.com rating 3.6/5