அறிமுக இயக்குனர்களை தேர்வு செய்து தொடர் வெற்றிகளை கொடுக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ”கொலை”!

அறிமுக இயக்குனர்களை தேர்வு செய்து தொடர் வெற்றிகளை கொடுக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ”கொலை”!

 

தமிழ் திரைப்படத் துறையில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி . இவரை அனைத்து தரப்பு ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ஜூலை 21, 2023 அன்று உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா கரியரில் ஒருமுறையாவது இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பை ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றும் மர்மத்தை உடைக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் என்று நான் சொல்வேன். அதுமட்டுமின்றி, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. மேலும், நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.. ‘கொலை’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வருமா? என்ற கேள்விக்கு, “’கொலை’யின் உலகம் இன்னும் பல பாகங்களுடன் விரிவடைவதைக் காண நான் ஆர்வமாக உள்ளேன். எங்கள் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்த யோசனையை தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்து வரும் காலத்தில் அறிவிப்போம்” என்றார்.

நடிகை ரித்திகா சிங் கூறும்போது, “தமிழ் சினிமா தொடர்ந்து மனதுக்கு நெருக்கமான நல்ல கதாபாத்திரங்களை எனக்கு அளித்து வருகின்றன. ’கொலை’ படத்தில் எனக்கு புத்திசாலித்தனமான ஒரு புலனாய்வு அதிகாரி கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தின் புத்திசாலித்தனத்தை சோதிக்கும் சவாலான சூழ்நிலைகளை அவள் அடிக்கடி எதிர்கொள்வாள். கொலையின் மர்மத்தை முறியடிப்பது அவளுடைய முக்கிய வேலையாக இருக்கும் அதே வேளையில், அவள் தனது மூத்த அதிகாரிகளுடன் அலுவல் ரீதியான தொல்லைக்கு ஆளாகிறாள். இது அவளுடைய நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. ஆனால், பார்வையாளர்கள் எங்கள் ஆன் ஸ்கிரீனில் காம்போவை ரசிப்பார்கள். விஜய் ஆண்டனி சார் ஒரு அற்புதமான சக நடிகராக இருந்தார். அவர் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் அனைவரின் மீதும் அக்கறை காட்டுவார். அவர் தனது முந்தைய படங்களில் திறமையான நடிப்பைக் கொடுத்திருந்தாலும், ‘கொலை’ திரைப்படம் அவரை புதிய அவதாரத்தில் காண்பிக்கும். இயக்குநர் பாலாஜி குமாரின் நம்பிக்கையும் அர்ப்பணிப்புமே இந்தப் படம் உருவாக முக்கியக் காரணம். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை நேரில் பார்க்கக் காத்திருக்கிறேன். ‘கொலை’ நிச்சயம் அவர்களை ஆச்சரியப்படுத்தும், படத்தில் உள்ள திருப்பங்கள் பார்வையாளர்களின் யூகங்களை நிச்சயம் உடைக்கும்” என்றார்.

Kolai Movie Press Meet Stills

’கொலை’ திரைப்படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த மிஸ்ட்ரி திரில்லர் கதைக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலாஜி குமார் எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் தவிர, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ’கொலை’ திரைப்படம் ஜூலை 21, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி அதை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *