அஜித்தின் விடாமுயர்சி படப்பிடிப்பு தொடங்குமா! விஜய்யின் படத்துடன் மீண்டும் மோதலா!

அஜித்தின் விடாமுயர்சி படப்பிடிப்பு தொடங்குமா! விஜய்யின் படத்துடன் மீண்டும் மோதலா!

முன்பெல்லாம் நடிகர் அஜித்தின் கால்ஷீட் கிடைக்காமல் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போடும் நிலையில், அவரின் கால்ஷீட்டை வைத்துக்கொண்டே லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தை தொடங்காமல் இருப்பது பலருக்கும் புரியாத புதிர் ஆக உள்ளது. இந்தப்படம் அஜித் நடிக்கும் 62-வது படமாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதமே இப்படம் குறித்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியானது. விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை இயக்குவார் என்றும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதையடுத்து ஜனவரி மாதம் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனதும் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். ஷூட்டிங் ஆரம்பமாவதற்கு சில நாள் முன் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கி விட்டனர். விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட பின்னர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். கடந்த பிப்ரவரி மாதம் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்து படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளும் தொடங்கப்பட்டன. இதற்காக மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தன்னுடைய உதவி இயக்குனர்களுடன் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் மகிழ் திருமேனி. அவர் கமிட் ஆகி 3 மாதங்களுக்கு பின்னர் ஏகே 62 படத்திற்கு விடாமுயற்சி என பெயரிட்டுள்ளதாக  படக்குழு அறிவித்தனர்.

பெயரை அறிவித்தவுடன் ஷூட்டிங்கையும் தொடங்கப்படும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்குது. இதோ அதோ என ஷூட்டிங் தொடங்கும் தேதியையும் தள்ளிக்கொண்டே இருக்கின்றனர்.

விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதம் ஆவதற்கு மகிழ் திருமேனி அளித்த ஸ்கிரிப்ட்டும் அஜித்திற்கு திருப்தி அளிக்காதது தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் விக்னேஷ் சிவனை போல் மகிழ் திருமேனியை கழட்டிவிடும் ஐடியாவில் அஜித் இல்லையாம்.ஸ்கிரிப்ட்டில் மாற்றங்களை செய்யச் சொல்லிவிட்டு லண்டனுக்கு சென்றுவிடார் அஜித் , விடாமுயற்சி ஷூட்டிங் எப்போது தான் ஆரம்பமாகும் என விசாரித்ததில், ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் லியோ படத்துக்கு போட்டியாக இப்படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது தளபதி 68 படத்துக்கு போட்டியாக மாறிவிட்டதே என அஜித் ரசிகர்கள் வருத்ததுடன் உள்ளனர். விஜய்யின் தளபதி 68 படமும் ஆகஸ்ட் மாதம் தான் தொடங்க உள்ளது. திட்டமிட்டபடி ஷூட்டிங்கை முடித்தால் இந்த இரண்டு படங்களும் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *