மீண்டும் தொடங்கியது தங்கலான் படப்பிடிப்பு! அடையாளம் தெரியாமல் மறிப்போன்

மீண்டும் தொடங்கியது தங்கலான் படப்பிடிப்பு! அடையாளம் தெரியாமல் மறிப்போன்

விக்ரம் நடிப்பில் கோலார் தங்க வயலில் தொடங்கப்பட்ட தங்கலான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள evp ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த தங்கலான் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார் நடிகர் சியான் விக்ரம். இப்படம் கேஜிஎப் பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Breathtaking 'Thangalaan' making video released as Chiyaan Vikram b'day  gift - Tamil News - IndiaGlitz.com

இதற்கிடையில் நடிகர் விக்ரமின் காட்சிகள் எடுக்கப்பட்டபோது, அவர் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு, விலா எலும்பும் முறிந்தது. இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பின் தற்போது உடல் நலம் தேறியுள்ள விக்ரம், மீண்டும் தங்கலான் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

படப்பிடிக்காக மேக்கப் போட்டு தயாராகும் சில புகைப்படங்களை விக்ரம் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருது. இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு தாடி – மீசையோடு கண்ணம் எல்லாம் சுருங்கி, வேறு ஒரு விதமான லுக்கில் நடிகர் விக்ரம் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *