அனல் அரசு இயக்கும் முதல் படத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகிறார்!

அனல் அரசு இயக்கும் முதல் படத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகிறார்!

தன் மகன் சூர்யாவை ஹீரோவாக்க போகிறார் விஜய் சேதுபதி. சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் இந்த படத்தை இயக்கப் போவது வேறு யாருமில்லை பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான அனல் அரசு தான். இது தான் அனல் அரசு இயக்கும் முதல் படமாகும்.

நடிகர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள் இயக்குநராவது புதிது அல்ல. இந்நிலையில் தான் அனல் அரசுவும் கேமராவுக்கு பின்னால் நிற்க முடிவு செய்திருக்கிறார். அவர் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால் சூர்யாவை வைத்து ஆக்ஷன் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Viduthalai 2: 'விடுதலை 2' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி மகன்: அதுவும்  இப்படி ஒரு ரோலிலா.? - vijay sethupathi son plays an important role in  viduthalai 2 movie - Samayam Tamil

சூர்யா விஜய் சேதுபதியின் பட ஷூட்டிங் விரைவில் துவங்கவிருக்கிறது. அந்த படத்தில் யார், யார் எல்லாம் நடக்கிறார்கள் என்பது தெரியவில்லை. யார் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் எங்களுக்கு விஜய் சேதுபதி ஒரு காட்சியிலாவது வந்துவிட்டு செல்ல வேண்டும் என மக்கள் செல்வனின் ரசிகர்கள் அனல் அரசுவுக்கு அன்புக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தன் மகன் சும்மா ஹீரோவாக வரக் கூடாது என்று சூர்யாவை ஏற்கனவே பல கிளாஸுகளுக்கு அனுப்பி வருகிறார் விஜய் சேதுபதி. தற்காப்பு கலை, டான்ஸ் என்று பல விஷயங்கள் கற்று வருகிறார் சூர்யா. இந்த சூழலில் தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஒரு சூர்யா இருப்பதால் விஜய் சேதுபதி தன் மகனின் பெயரை மாற்றுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *