அஸ்வின்ஸ் திரை விமர்சனம்

அஸ்வின்ஸ் திரை விமர்சனம்

அஸ்வின்ஸ் திரை விமர்சனம :

இயக்குனர் – தருண் தேஜா மல்லரெட்டி

நடிகர்கள் – வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன்

தயாரிப்பு – பாபிநீடு

ஐந்து நபர் கொண்ட ஒரு குழு பேய் இருப்பதாக நம்பப்படும் மாளிகைக்கு சென்று இரவில் அங்கு தங்கி நடப்பவைகளை யூடியூப்பில் பதிவு செய்யும் வேலை செய்கின்றனர் , ஒரு நாள் அவர்களுக்கு வெளி நாட்டில் ஒரு மாளிகையை ஒலிப்பதிவு செய்து படம் பிடிக்குமாரு அழைப்பு வருகிறது, அழைப்பை ஏற்றுக்கொண்ட குழு அந்த மாளிகைக்கு செல்கின்றனர் , அங்கு ஒரு அமானுசிய சக்தியிடம் மாட்டிகொல்கின்றனர் இதன் பின் அங்கிருந்து தப்பித்தார்களா என்பதே மீதிக்கதை,

இந்தப் படத்தில் தரமணி மற்றும் ராக்கி பட புகழ் வசந்த்ரவி கதாநாயகனாக நடித்திருக்கிறார், மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் விமலா ராமன் நடித்துள்ளார்,

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஓர் விவசாயிக்கு இரண்டு சிரு வயது மகன்கள் இருக்கின்றனர் இருவரும் இறக்க நேர்கிறது , இதனை தாங்க முடியாத அந்த விவசாயி கடவுளை நோக்கி பெரும் தவம் ஒன்றை செய்கின்றான் , அவன் தவத்தை கண்ட அஸ்வினா ( இரட்டை தெய்வங்கள் ) இருவரில் ஒருவரை மட்டும் உயிருடன் கொண்டு வருகின்றனர், அந்த சிறுவனுக்கு இரண்டு சிலைகளை அந்த தெய்வங்கள் கொடுக்கின்றனர் அந்த சிலைகளுக்கு அசாதாரண சக்திகள் உள்ளது , அது அவனது கையில் இருக்கும் வரை எந்த தீய சக்தியாலும் பாதிப்பு வராது என கூறி அந்த அஸ்வினாக்கள் மறைந்து விடுகின்றனர், இதனை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தீய ஆன்மா அந்த சிறுவனை ஏமாற்றி ஒரு சிலையை அவனிடமிருந்து வாங்கிகொண்டு தீய வேலைகளை செய்கிறது , மக்கள் அனைவரும் ஒன்று கூடி யாகம் செய்து அந்த சிலையை கைப்பற்றி இரண்டு சிலையையும் ஒன்றாக கட்டி வைத்து புதைத்து விடுகின்றனர், இப்போது தொல்லியல் ஆராய்ச்சியால் அந்த சிலை கண்டு பிடிக்கப்பட்டு மீண்டும் அந்த தீய ஆத்மா வெளியே வந்து விடுகிறது, அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை

ஒரு நல்ல ஹாரர் படத்திற்கு தேவையான கதை இப்படத்திற்கு அமைந்துள்ளது, படத்தின் முதல் பாதி அனைவரையும் ஈர்க்குமாரு அமைத்துள்ளது முக்கியமாக சவுண்ட் மிக்சிங் பெரும் பங்கு வகித்துள்ளது , இரண்டாம் பாதி கதையை சிறிது மெதுவாகவே நகர்த்தி செல்கிறது , படம் டெக்னிக்கலாக மிகப்பெரிய வெற்றி தான் குறிப்பாக படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு, திகில் படத்திற்கு தேவை இந்த இரண்டும் தான் இரண்டுமே இந்த படத்தின் மிகப்பெரும் பக்க பலமாக நிற்கிறது, இந்த படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாளிகை கதைக்கு அருமையாக பொருந்தியுள்ளது,

கதை முன்னும் பின்னுமாக மாறி மாறி விளக்குவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும், படத்தில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பு ஒரு சில இடங்களில் சலிப்படைய செய்கிறது, அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் அப்படி செய்திருந்தால் படம் இன்னும் நம்மிடம் பதிந்திருக்கும், கிளைமாக்ஸ் காட்சிகளில் வசந்த் ரவியின் நடிப்பு ஒரு சாதாரண நடிகராக காட்டுகிறது , ஹாரர் படங்களை வசந்த் ரவி தவிர்ப்பதே அவருக்கு நல்லது,

 அஸ்வின்ஸ் டெக்னிக்கல் குழுவின் வெற்றியால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய ஒரு நல்ல ஹாரர் படமாக இருக்கிறது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *