இசையமைப்பாளர் தமனின் ஹோட்டல் பில்லை பார்த்து கடுப்பான தயாரிப்பாளர்! படத்திலிருந்து நீக்கம்!

இசையமைப்பாளர் தமனின் ஹோட்டல் பில்லை பார்த்து கடுப்பான தயாரிப்பாளர்! படத்திலிருந்து நீக்கம்!

தெலுங்கில் 5க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் மியூசிக் டைரக்டர் தமன் ஸ்டார் ஹோட்டலான ஹயாத்தில் சூட் ரூமை எடுத்து தங்கியுள்ளார். இதற்காக அவர் 40 லட்சம் செலவானதாக தயாரிப்பாளர் ஒருவருக்கு பில் கொடுத்துள்ளார், அதனை வாங்கிய தயாரிப்பாளர் கடுப்பாகி விட்டாராம். பல படங்களுக்கு இசையமைத்து  விட்டு மொத்த பில்லையும் ஏன் என் தலைமீது கட்டுறீங்க என தயாரிப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார், இது தெலுங்கு சினிமாவில் அவருக்கு சிக்கலை உண்டாக்கி உள்ளது.

இதன் காரணமா தமனை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பிச்சிருக்காய்ங்க.

பாய்ஸ் படத்தில் நடித்த தமன் மல்லி மல்லி எனும் தெலுங்கு படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழில், சிந்தனை செய் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்தார். இப்போ பிசியான (மாதிரியான) இசையமைப்பாளராக மாறியுள்ள தமன் கடந்த ஆண்டு இறுதியில் பிரின்ஸ், இந்த ஆண்டு வாரிசு, வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், வயிறு எரியுதுன்னா வாழைப்பழம் சாப்பிடுங்கன்னு ஒரு ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். மேலும், நாளை முதல் என் ஸ்டூடியோவில் இலவசமாக மோர் தருகிறேன்.மோர் குடித்தாலும் வயிறு எரிச்சல் குறையும் என பதிவிட்டுள்ளார். இது ட்ரோல் செய்த நெட்டிசன்களுக்கான போஸ்ட்டா? அல்லது தமனை திட்டிய தயாரிப்பாளருக்கான போஸ்ட்டா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், தமனின் இந்த பதிவு ரொம்பவே திமிராக உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளன.

S Thaman's physical transformation picture: Fans wonder whether the music  director lost weight due to Covid-19 | Tamil Movie News - Times of India

டெயில் பீஸ்

மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திற்கு தமன் இசையமைத்து வந்த நிலையில், அவர் மீது எழுந்த இந்த புகார் காரணமாக மகேஷ் பாபு படத்தில் இருந்து நீக்கி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ப்ரோ, ராப்போ 20, பகவந்த் கேசரி மற்றும் குண்டூர் காரம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வந்த தமன் தற்போது மகேஷ் பாபு படத்தில் இருந்து விலகும்பட்சத்தில், அனிருத் அல்லது ஜிவி பிரகாஷ் இருவரில் ஒருவர் அந்த படத்துக்கு இசையமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *