பாக்கியராஜ் விழக்கேற்றி துவங்கி வைத்த இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனர் ஜேபி இயக்கும் படம்!

பாக்கியராஜ் விழக்கேற்றி துவங்கி வைத்த இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனர் ஜேபி இயக்கும் படம்!

கதாநாயகியயை மையமாகக் கொண்டு இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனர் ஜேபி இயக்கும் திரில்லர் படமான “BP180” படம் இன்று துவங்கியது.

ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் “BP180”. இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில்

தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா பேசியதாவது…
இது எங்கள் முதல் தயாரிப்பு, குஜராத்திலிருந்து இங்கு நம்பிக்கையுடன் வந்துள்ளோம். மிகச்சிறந்த திரைப்பட குழுவினர் இப்படத்தை உருவாக்கவுள்ளனர். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது…
அதுல் சார், ராட்சசன் பார்த்துவிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றார். இயக்குநர் ஜேபியை என்னிடம் அனுப்பினார் அவர் கதை சொல்லச் சொல்ல, மிக அட்டகாசமாக இருந்தது. இந்தக்கதைக்குப் பொருத்தமான டைட்டில் இது தான், படம் இப்போது தான் துவங்கியுள்ளோம், முடிந்தபிறகு இன்னும் நிறையப் பேசலாம் நன்றி.

நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசியதாவது…
இந்தப்படம் எனக்கு மிகப் புதுமையான ரோல், க்ரைம் திரில்லர் கதை. ஜேபி சார் இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப்படம் ரசிகர்களுக்குப் புதுமையாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் ஜே பி பேசியதாவது..,
இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி, எனக்கு இது முதல் மேடை என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, நான் மிஷ்கின் சாரின் மாணவன் “அஞ்சாதே” படத்திலிருந்து நான் அவருடன் பயணம் செய்துள்ளேன். ஆடியோ விழாவிற்கு வருவதாகக் கூறியுள்ளார். அவரது பெயரைக் காப்பாற்றுவேன். இந்த படத்தை பெரும் பொறுப்போடு செய்வேன். இதன் மதிப்பு எனக்குத் தெரியும் இப்படத்தைத் தயாரிக்கும் அதுல் சாருக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *