நம் சென்னையில் இருந்த இந்தியாவின் முதல் பீச் டிரைவ்-இன் தியேட்டர் தற்போது அது மூடப்படவுள்ளது!

நம் சென்னையில் இருந்த இந்தியாவின் முதல் பீச் டிரைவ்-இன் தியேட்டர் தற்போது அது மூடப்படவுள்ளது!

இந்தியாவின் முதல் பீச் டிரைவ்-இன் தியேட்டர் மற்றும் 1990களில் சென்னையின் முக்கிய அடையாளமான பிரார்த்தனா பீச்-டிரைவ்-இன் தியேட்டர் பிரீமியம் குடியிருப்பு வளாகத்தை உருவாக்க தயாராக உள்ளது. 1991ம் ஆண்டு இந்தியாவின் முதல் பீச் டிரைவ் இன் தியேட்டர், சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில் உருவாக்கப்பட்டது..பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டர் என்ற திறந்தவெளி திரையரங்கம், அடுத்து ஆராதனா என்ற உட்புற திரையரங்கம் திறக்கப்பட்டது.

காரில் நேரடியாக பிரார்த்தனா தியேட்டருக்குச் சென்று காரில் இருந்தபடியும், பக்கத்தில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தும், பாயைப் போட்டு படுத்தபடி, மிகப் பெரும் திரையில் படம் பார்ப்பது சென்னைவாசிகளுக்கு புது அனுபவமாக இருந்துச்சு. ஆனா இந்த கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்களில் சினிமா தொழிலும் ஒன்றாக இருந்தது. பல தியேட்டர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.. அப்படி பாதிப்பை சந்தித்த தியேட்டர்களில் பிரார்த்தனா தியேட்டரும் அமைந்தது. கடந்த நான்கு வருடங்களாகவே அந்தத் தியேட்டர் மூடப்பட்டுக் கிடந்தது.இப்போது தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று அந்தத் தியேட்டர் இருந்த இடத்தை வாங்கி அங்கு வீடுகளைக் கட்ட உள்ளது. அதற்காகத் தியேட்டர்களை இடிக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்குது

பிரார்த்தனா இன்னில் 4,500 சதுர அடி பெரிய திரை மற்றும் ஒவ்வொரு காருக்கும் பிரத்யேக பேயும் இருந்தது. அதன் உயரமான சரிவுகள் சிறந்த பார்வை அனுபவத்தை அளித்தது, பார்வையாளர்களில் சிலர் நினைவு கூர்ந்தனர். காரின் உள்ளே இருந்து பார்க்க விரும்பாதவர்களுக்காக 500 இருக்கைகள் கொண்ட கேலரியும் இருந்தது.

 

Go To Prarthana Beach Drive-in Theatre ECR | LBB, Chennai

மேலும் இதே சென்னை, மாம்பலம் பகுதியில் இருந்த பழமையான ஸ்ரீனிவாசா தியேட்டரையும் அதே கட்டுமான நிறுவனம் வாங்கிவிட்டதாம். அந்தத் தியேட்டரில்தான் அஜித், ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது.

ஒரு பக்கம் பழைய தியேட்டர்கள் மூடப்பட்டு வந்தாலும் மற்றொரு பக்கம் ஷாப்பிங் மால்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் புதிது புதிதாக திறக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தென்னிந்திய சினிமாவுக்கே தலைநகராக விளங்கிய சென்னையில் இருந்த ஒரே ஒரு டிரைவ் இன் தியேட்டர் இடிக்கப்படுவது சினிமா ரசிகர்களுக்கு வருத்தமான செய்திதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *