விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
இன்று (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணுவித்து மரியாதை செலுத்த வேண்டுமென்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
தன் மாவட்ட செயலாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் இந்த செய்தியை குறுஞ்செய்தி மூலம் அவர் தெரிவித்துள்ளதாகவும், தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்குது.
12
நாளை மறுநாள்- வருகிற 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளது என்றும் இதன் மூலம் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நேரடி பயணம் மேற்கொள்கிறார் என்றும் பேசப்ப்படுகிறது,
இது விஜய்யின் அரசியல் நகர்வாக இருக்கலாம் என்ற பேசப்ப்படுகிறது,
ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.