இசையை சந்தித்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்.

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து சித்திரை திருநாள் வாழ்த்து பெற்றனர்.
இசைஞானி இளையராஜா சார் MP ஆனதற்கும் மற்றும் சமீபத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விடுதலை பட இசைக்கும் சேர்த்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது இசைஞானியிடம் வருடத்திற்கு ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் என்றோம். அவசியம் சந்திப்போம் என்று அவரும் சிரித்த முகத்துடன் அந்த கோரிக்கையை ஏற்றார். அன்பு பரிசாக முருகன் சிலையும், ரமணர் ஓவியமும், அவர் பெயரில் அர்ச்சனை செய்த வடபழநி கோயில் பிரசாதமும் வழங்கினர்.
சந்திப்பு இனிதே நட ந்தது. இந்நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த PRO. திரு. டைமண்ட் பாபு மற்றும் இசைஞானி மேனேஜர் திரு. ஶ்ரீராம் ஆகியோருக்கு சங்கம் சார்பில் தலைவி கவிதா நன்றி தெரிவித்தார்.