ஷாருக்கானுடன் மோதும் விஜய்!

ஷாருக்கானுடன் மோதும் விஜய்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், சாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜவான். இதில் கதாநாயகியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார்கள். மேலும் யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த ஜவான் படத்தை வருகிற ஜூன் 2-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்தாண்டு வெளிவந்த டீசரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது வரை படபிடிப்பு நிறைவடையாததால், படம் ஜூன் மாதம் வெளியாக வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.

படபிடிப்பை முடித்தாலும், கிராபிக்ஸ் மற்றும் பின்னணி பணிகள் இருப்பதால், இப்படத்தை ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்போ ஜவான் படம் அக்டோபருக்கு தள்ளிப்போவதால், அப்படம் விஜய்யின் லியோ படத்துடன் மோத உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

ஜவான் படக்குழுவின் இந்த திடீர் மாற்றத்தால், லியோ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் லியோ படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இதன்மூலம் இந்தியிலும் விஜய்யின் மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜவான் படமும் அக்டோபரில் ரிலீஸ் ஆகும் என்கிற தகவல் லியோ படத்துக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பதான் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்தது. அதனால் ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சமயத்தில் அப்படத்துடன் வெளியானால் லியோவின் வசூலுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Will Shah Rukh Khan's 'Jawan' clash with Vijay's 'Leo'? | Tamil Movie News  - Times of India

ஜவான் படம் அக்டோபரில் ரிலீஸாகும் என்கிற தகவலை அறிந்த ரசிகர்கள், வளர்த்துவிட்ட விஜய்க்கு எதிராக அட்லீ உருவாகி வருகிறார் என்று குறிப்பிட்டு வருகிறார்கள். ஆனால் விஜயின் அடுத்த படத்தை இயக்க போவதே அட்லீ தான் என்ற தகவலும் வந்த வண்ணம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *