அருள்நிதி- துஷாரா விஜயன் நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு!

தொடர்ந்து வெவ்வேறு கதைகள் மூலம் ரசிகர்களுக்கு நல்ல படைப்புகளைக் கொடுக்க முயற்சிக்கும் ஆட்கள் ஒரு புள்ளியில் இணைந்தார் போல் உருவாகி கொண்டு இருக்கிறது, ” கழுவேத்தி மூர்க்கன். நடிகர் அருள்நிதி தனது கதை தேர்வு மற்றும் நடிப்பால் திரையுலகத்தையும், ரசிகர்களையும் தொடர்ந்து கவர்ந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதையடுத்து, இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகள் இருக்க கூடிய பல படங்களை வெளியீட்டிற்கு தயாராக வைத்துள்ளார்.
ஒலிம்பியா மூவீஸ் அம்பேத்குமார் வழங்கும் அருள்நிதி-துஷாரா விஜயன் நடிப்பில், கௌதம ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், கவின் -அபர்ணாதாஸ் நடிப்பில் வெற்றியடைந்த ‘டாடா’ படத்தைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில், ‘ராட்சசி’ படப்புகழ் சை கெளதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘கழுவேத்தி மூர்க்கன்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு படம் குறித்தான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, இராமேஸ்வரம், விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
நடிகர்கள்: அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், சரத்லோகிதாஸ்வா, ராஜசிம்மன், ‘யார்’ கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
இயக்கம்: சை கௌதம ராஜ்,
இசை: டி. இமான்,
பாடல்கள்: யுகபாரதி,
ஒளிப்பதிவு: ஸ்ரீதர்,
படத்தொகுப்பு: நாகூரான்