இந்திய MP-களுக்கு ஆஸ்கார் விருது பெற்ற படம் திரையிடல்
திரையுலகில் வழங்கப்படும் உயிரிய விருதுகளில், மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கர் விருது என்ற கௌரவத்தை இந்த ஆண்டு கைப்பற்றிய இரண்டு இந்திய படைப்புகளை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் திரையிட உள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
RRR, The Elephant Whisperers என்ற இரண்டு திரைப்படங்களும் இந்த ஆண்டு ஆஸ்கார் கௌரவத்தை பெற்றது. சிறந்த பாடலுக்கான விருதை RRR படத்தின், நாட்டு நாட்டு பாடல் பெற்றது. சிறந்த டாக்குமென்டரி பிரிவில் The Elephant Whisperers திரைப்படம் வென்றது. இந்த இரண்டு படத்திற்கும் இந்தியா முழுவதும் பல பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்த வகையில் அரசு சார்பில், இந்த இரண்டு விருதுகளை வென்ற கலைஞர்களையும் மற்றும் படக்குழுவினரையும் கவுரவிக்கும் திட்டம் உள்ளது.
RRR படமும், The Elephant Whisperers ஆவண குறும்படமும் எம்.பி.க்களுக்கு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தின் பால் யோகி அரங்கத்தில் திரையிடப்படவுள்ளது. இதற்கான முயற்சிகளை அமைச்சர் அனுராக் தாக்குர் மேற்கொண்டு வருகிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன.