” பகாசூரன் ” திரைப்பட இயக்குனர் மோகன். G க்கு 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் கௌதம்.

” பகாசூரன் ” திரைப்பட இயக்குனர் மோகன். G க்கு 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார்  தயாரிப்பாளர் கௌதம்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கிய ” பகாசூரன் ” படம் கடந்த பிப்ரவரி 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தில் மூத்த இயக்குனரான செல்வராகவனுடன், நட்டி நடராஜன் இணைந்து நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். வாத்தி திரைப்படத்துடன் இந்த திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவின் முக்கிய கூட்டணியான தனுஷ்- செல்வராகவன் கூட்டணி பல முக்கிய திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளது. அந்த வகையில் இருவருடைய நடிப்பில் வெவ்வேறு படங்கள் உருவாகி, அது ஒரே நாளில் வெளியானதும் சுவாரஷ்யமான பேச்சாய் இருந்தது.

படத்திற்கு மக்கள் மத்தியிலும், விமர்சகர் மத்தியிலும் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் அவர்கள் இயக்குனர் மோகன் G க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கியதோடு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

Image

இவர்களுடன் நடிகர் ரிஷி ரிச்சர்ட் அவர்களுடன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *