பொன்னியின் செல்வன் 2-வின் முதல் பாடல் வெளியீட்டு தேதி!

பொன்னியின் செல்வன் 2-வின் முதல் பாடல் வெளியீட்டு தேதி!

‘பொன்னியின் செல்வன்; இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இறுதி கட்ட போஸ்ட் ப்ராடக்ட்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 28ல் படம் ரிலீஸ் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்ததை அடுத்து இந்த படத்தின் புரோமோஷன் பணிகளையும் தொடங்க பட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

முதல் கட்டமாக இதன் முதல் பாடல் வரும் 14ஆம் தேதி அன்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த பாடலை இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்ததோடு பாடியும் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த பாடல் பொன்னியின் செல்வனுக்கும் வானதிக்குமான காதல் பாடல் என்றும், இந்த பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தை பார்த்த அனைவருமே இரண்டாம் பாகத்தையும் பார்ப்பார்கள் என்பதால் ‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் முதல் பாகம் போலவே ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *