தளபதி -67 விற்காக டைட்டில் போர்!

தமிழ் சினிமாவின் இப்போதைய ட்ரென்டிங்க் தளபதி 67 தான். தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை எகிர வைத்த இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் உடன், விஜய் இணைகிறார் என்பதே மிகப்பெரிய பேசு பொருளாக பேசப்பட்டது. அதோடு தளபதி 67 படத்தின் அறிவிப்புகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தில் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியானது. மேலும், கேங்ஸ்டர் படமாகவும் ஆக்சன் படமாகவும் உருவாகும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களின் காத்திருப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தினம்தோறும் பல அப்டேட்டுகளை வாரிவழங்கிக் கொண்டிருக்கிறது படக்குழு. ஏற்கனவே படத்தின் நடிகர் நடிகைகளின் தகவல்களை வெளியிட்டது படக்குழு.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து அப்டேட்டுகள் குவிந்து வருவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
அதுபோக ரசிகர்கள் இந்த படம் LCU-ல் வருமா, இல்லை தனிப்படமா என்ற ஆவலில் காத்து இருக்கின்றனர். இதனுடன் இணையத்தில் தளபதி -67 உடைய டைட்டில் இது தான், அது தான் என்ற பல பெயர்கள் ஓடிகொண்டு இருக்கிறது. ஒரு டைட்டில் போரே சமூக வளைதளத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. எதிர்பார்ப்பை எகிற வைத்த படத்தின் டைட்டிலை பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்