கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய சசிகுமாரின் ‘அயோத்தி’ திரைப்படம்
மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயோத்தி’. இந்த படத்தில் போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ், யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மாதேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் உள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமூகத்தில் நிலவும் மதரீதியான பிரச்சனைகளை பேசும் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் நரன் தெரிவித்து இருக்கிறார்.
இது குறிச்சு அவர் கூறியதில், தன்னோட சரீரம் என்ற சிறுகதை தொகுப்பில் உள்ள வாரணாசி சிறுகதை தான் இந்த படத்தின் கதை. சமீபத்தில் வெளியான டிரெய்லர் மூலம் இது தெரிய வருகிறது. இறந்த கணவனின் உடலை தகனம் செய்ய ஒரு பெண் வாரணாசிக்கு செல்லும் கதை தான் அந்த சிறுகதை. அந்த கதை போன்றே இந்த படமும் உருவாகியுள்ளது. எழுத்தாளர் நரன் கூறிய இந்த குற்றச்சாட்டு படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது