ரஜினி, கமல் படங்களுக்கு சண்டை காட்சிகளை வடிவமைத்த ஜூடோ ரத்தினம் காலமானார்
கோலிவுட் & டோலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார். இந்திய சினிமாவில் 50 ஆண்டு காலமாக இயங்கி வந்தவர் ஜூடோ ரத்தினம். ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் அதிக நபரால் விரும்பப்படும் சண்டை இயக்குனராக இருக்கிறார்.
70,80 களில் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராஜ்குமார் என பலருக்கும் சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்தவர் இந்த ஜூடோ கே.கே.ரத்தினம் .
இதுவரையில் 1500 படங்களுக்கு மேலே சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார் ரத்தினம் . பொதுவாக ரஜினி என்றாலே ஜூடோ ரத்தினம்தான் சண்டைப்பயிற்சி செய்வார் என்று கூறப்படுகிறது. ரஜினியின் 46 படங்களுக்கு ஜூடோ ரத்தினம்தான் சண்டை இயக்குநராக இருந்திருக்கிறார்.
ரஜினியின் முரட்டுக்காளை திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம் படத்தின் சண்டைக்காட்சிகள்தான். அந்த படத்தில் ரயிலில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்றில் , என் மகன் ராமை இழந்திருப்பேன். ஆனால் சிறு காயங்களுடன் தப்பித்தார் என பல சமயம் அந்த நினைவுகளை கண்ணீரோடு கூறூவார் ஜூடோ ரத்தினம். கமலுக்கு 6 படங்களுக்கு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார் . கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்கு 56 படங்களுக்கு மேல் சண்டைப்பயிற்சி செய்து இருக்கிறார்.
தமிழ் சினிமா நடிகர்களுக்கு ஏற்ற மாதிரியாக சண்டைப்பயிற்சிகளை சொல்லிக்கொடுப்பார் என்று கூறப்படுகிறது. ஜெய்சங்கர் , கமல் , ரஜினி , சிவாஜி , ராமராஜன் என ஒவ்வொரு கலைஞர்களின் திறனுக்கு ஏற்ற மாதிரியான பயிற்சிகளை வழங்குவார் என்று கூறப்படுகிறது . அவரது மறைவிற்கு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.