வாத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது!

வாத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது!

‘வாத்தி‘ படத்தின் மூலம் நடிகர் தனுஷ் முதல் முறையாக தெலுங்கு சினிமா துறையில் அறிமுகமாகி இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இதை ‘தோழி பிரேமா’, ‘மிஸ்டர் மஜ்னு’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இதில் நாயகியாக சம்யுக்தா மேனன் நடித்து இருக்கிறார். படத்தில் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி உள்ளது. வா வாத்தி, நாடோடி மன்னன் என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.

May be an image of 2 people, wrist watch and text that says "ADITYA MUSIC G.V.PRAKASH KUMAR MUSICAL NAADODi MANNAN LYRIC VIDEO DHANUSH வாத்தி DERECTEDBY VENKY ATLURI NAGA AMSLS SOUJANYA"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *