விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி

மலேசியாவில் நடைபெற்று வரும் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஆண்டனக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

2016இல் ரிலீஸாகி தமிழ், தெலுங்கு என சூப்பர் ஹிட்டான படம் பிச்சைக்காரன். சசி இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து இருந்தார்.

அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து அவருக்கு உடனடியாக படபிடிப்பு தளத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

முதலில் இந்த படத்தை இயக்குவதாய் இருந்தது பாரம் திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி அவர்கள் தான். பின்னர் தான் விஜய் ஆண்டனி இந்த படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. பிச்சைக்காரன் 2 படத்தை தனது விஜய் ஆண்டனி புரொடக்‌ஷன் மூலம் தயாரிப்பதோடு, இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனாரக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *