அர்ஜூன் தாஸ் – ஐஸ்வர்யா லக்ஷ்மி காதலா?
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ஹார்ட் எமோஜியை பதிவிட்டது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தில் துவங்கி, கட்டா குஸ்தி வரை அனைவரையும் ரசிக்க வைத்த ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது காதலை வெளிப்படையாக அறிவித்து விட்டார் என பலரும் நம்பினர்.
இந்த விஷயம் பூதாகரமான நிலையில், நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நாங்கள் இருவருமே நண்பர்கள் தான் காதலர்கள் இல்லை என அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த கட்டா குஸ்தி ஹீரோயின் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிகர் அர்ஜுன் தாஸ் தோளில் சாய்ந்துக் கொண்டு படு ரொமாண்டிக்காக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு கூடவே ஹார்ட் சிம்பிளையும் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் ஐஸ்வர்யா லக்ஷ்மியை வாழ்த்தினர்.
அர்ஜுன் தாஸும் நானும் கேஷுவலாக சந்தித்தோம். அப்போது எடுத்துக் கொண்ட பதிவை போட்டு ஒரு ஹார்ட்டின் எமோஜியை சும்மா தட்டி விட்டேன். அதற்குள் அது இப்படி பூதாகரமாக வெடிக்கும் என கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை, வெறும் நண்பர்கள் தான் என விளக்கம் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா லக்ஷ்மி.