தங்கலான் படத்திற்காக மீண்டும் உடலை வருத்தும் விக்ரம்

தங்கலான் படத்திற்காக மீண்டும் உடலை வருத்தும் விக்ரம்

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து கொண்டு இருக்கும் திரைபப்டம் ‘தங்கலான்’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் தயாரிக்க, பா ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படபிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

அனைத்து படங்களிலும் உடலை வருத்தி மெனக்கெடும் நடிகர்களில் விக்ரமிற்கு தனி இடம் உண்டு, அவருடைய எல்லா படங்களிலும் இது தொடர தான் செய்கிறது. அதுபோல இந்த படத்திலும் விக்ரம் தன்னை உருமாற்றி உள்ளார்.

கோலார் தங்க வயலில் பணியாற்றிய தமிழர்களின் அவல நிலையை சித்தரிக்கும் கதையம்சத்தில் இந்த படம் உருவாவதாக கூறப்படுகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பை கோலார் தங்க வயல் பகுதியிலேயே நடத்தி வருகிறார்கள். இந்த படத்துக்காக விக்ரம் சட்டை அணியாமல் வேட்டியை கோவணம் போல் கட்டிக்கொண்டு கையில் ஆயுதம் ஏந்தி மிடுக்காக நிற்கும் தோற்றம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்த தோற்றத்துக்கு மாற விக்ரம் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *